கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு + "||" + Kolkata Knight Riders win the toss, opt to bat first against Mumbai Indians

ஐபிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு

ஐபிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய 32-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
அபுதாபி,

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 32 வது ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகின்றன. இன்றைய ஆட்டம் அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து 7.30 மணிக்கு தொடங்கவுள்ள ஆட்டத்தில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.