மாநில செய்திகள்

5 புதிய மாவட்டங்களில் தேர்தல் நிர்வாக உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கம் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல் + "||" + In 5 new districts evelopment of Electoral Administrative Infrastructure Facilities Chief Electoral Officer Satyaprada Sahu Info

5 புதிய மாவட்டங்களில் தேர்தல் நிர்வாக உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கம் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல்

5 புதிய மாவட்டங்களில் தேர்தல் நிர்வாக உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கம் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல்
5 புதிய மாவட்டங்களில் தேர்தல் நிர்வாக உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 5 புதிய மாவட்டங்கள் சமீபத்தில் உருவாக்கப்பட்டன. 

இந்த மாவட்டங்களில் தேர்தல் நிர்வாக வசதிக்காக தனி உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

அவற்றின் மூலம் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, மின்னணு தகவல் தரவு மையம் ஆகியவற்றை பராமரிக்க முடியும் என்றும்  தனி தேர்தல் பிரிவு அந்த புதிய மாவட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்சியர்கள்,  மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.