தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழ்நாட்டை பின்னுக்கு தள்ளியது கேரளா + "||" + Kerala has overtaken Tamil Nadu in the number of corona victims

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழ்நாட்டை பின்னுக்கு தள்ளியது கேரளா

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழ்நாட்டை பின்னுக்கு தள்ளியது கேரளா
கேரளாவில் கொரோனா பாதிப்புகள் இன்று 7,283 ஆக பதிவாகி உள்ளது. இதனால் ஒரு நாளைக்கு ஏற்படும் தொற்று எண்ணிக்கையில் தமிழ்நாட்டை பின்னுக்கு தள்ளியுள்ளது.
திருவனந்தபுரம்,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் பாதிப்புகளின் தீவிரம் சற்று குறைந்துள்ளது.  தமிழகத்தில் 4,389 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.  இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,79,191 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் 57 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,529 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரசின் புதிய பாதிப்பு எண்ணிக்கை இன்று 7,283 ஆக பதிவாகி உள்ளது.  இதனால், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 95,008 ஆக உயர்ந்து உள்ளது.  6,767 பேர் இன்று குணமடைந்து சென்றுள்ளனர்.

கேரளாவில் கொரோனா வைரசின் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையானது தமிழ்நாட்டை இன்று பின்னுக்கு தள்ளியுள்ளது.  இதுவரை பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,28,998 ஆக உயர்ந்து உள்ளது.  கேரளாவில் மொத்தம் 3.25 லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  1,113 பேர் உயிரிழந்து உள்ளனர்.

நாட்டிலேயே முதன்முதலாக கேரளாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு நோயாளிகள் பின்னர் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு சென்றனர்.  தொடர்ந்து பல நாட்களாக குறைந்த தொற்று எண்ணிக்கையை கொண்டிருந்த கேரளாவில் சமீப நாட்களாக கொரோனாவின் தீவிரம் அதிகரித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் 90 லட்சம் கடந்த கொரோனா பாதிப்பு; புதிய உச்சம் தொட்டது
அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் ஒரு நாளில் புதிய உச்சம் தொட்டதுடன் மொத்தம் 90 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது.
2. பிபா தலைவர் கியானிக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் கியானி இன்பேன்டினோ கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
3. இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 90 சதவிகிதம் - சுகாதாரத்துறை தகவல்
இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 90 சதவிகிதமாக உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
4. அமெரிக்க துணை ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகர் உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு
அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்சின் அரசியல் ஆலோசகர் உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. போலந்து அதிபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
போலந்து நாட்டு அதிபர் ஆண்டிரெஜ் துதாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.