தேசிய செய்திகள்

கர்நாடகாவில் இன்று மேலும் 7,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Karnataka reports 7542 new cases, 73 deaths and 8580 discharges today.Government of Karnataka

கர்நாடகாவில் இன்று மேலும் 7,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடகாவில் இன்று மேலும் 7,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று 7,542 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு முதலில் கட்டுக்குள் இருந்தது. ஆனால் கடந்த மாதத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டே உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், இன்று கர்நாடகாவில் இன்று 7,542 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,51,390  ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 73 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,356 ஆக உயர்ந்துள்ளது.


மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 8,580 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,28,588 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 1,12,427 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கியது
கர்நாடகாவில் நேற்று புதிதாக 3,691 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியா-அமெரிக்கா இடையே இன்று பேச்சுவார்த்தை
இந்தியா-அமெரிக்கா இடையிலான ‘2 பிளஸ் 2’ பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடக்கிறது.
3. கர்நாடகாவில் நேற்று புதிதாக 3,130 பேருக்கு கொரோனா பாதிப்பு
கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 8,05,947 ஆக உயர்ந்து உள்ளது.
4. இந்தியா-அமெரிக்கா இடையே இன்று ‘2 + 2’ பேச்சுவார்த்தை
இந்தியா-அமெரிக்கா இடையிலான ‘2 + 2’ பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடக்கிறது.
5. இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 45,149 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரத்து 149-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.