தேசிய செய்திகள்

பெண்களுக்கு எதிராக உ.பி.யில் கடந்த ஒரு வாரத்தில் 13 கொடூர சம்பவங்கள் நடந்துள்ளன; பிரியங்கா காந்தி + "||" + There have been 13 violent incidents against women in UP in the last one week; Priyanka Gandhi

பெண்களுக்கு எதிராக உ.பி.யில் கடந்த ஒரு வாரத்தில் 13 கொடூர சம்பவங்கள் நடந்துள்ளன; பிரியங்கா காந்தி

பெண்களுக்கு எதிராக உ.பி.யில் கடந்த ஒரு வாரத்தில் 13 கொடூர சம்பவங்கள் நடந்துள்ளன; பிரியங்கா காந்தி
உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக கடந்த ஒரு வாரத்தில் 13 கொடூர சம்பவங்கள் நடந்துள்ளன என்று காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரை சேர்ந்த பட்டியலின வகுப்பை சேர்ந்த 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் 

கடந்த மாதம் 14ந்தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த பெண் சிகிச்சைக்காக டெல்லி சப்தர் ஜங் மருத்துவமனையில் 

அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் 2 வாரங்களுக்கு பின் உயிரிழந்து விட்டார்.

இதனையடுத்து, அந்த பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக ஹத்ராசுக்கு இரவோடு இரவாககொண்டு வந்த போலீசார், 

பெற்றோரின் அனுமதியின்றி அதிகாலையில் தகனம் செய்ததாக சர்ச்சை எழுந்தது. 

இந்த கொடூரமான சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பெரிய போராட்டங்கள் வெடித்தன.  உத்தர பிரதேச 

முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரையின்படி, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

அரசின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலையை சுட்டி காட்டி காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக 

தாக்கி பேசினார்.

இந்நிலையில், அவர் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உத்தர பிரதேசத்தில் கடந்த 9ந்தேதி முதல் 15ந்தேதி 

வரையில் பெண்களுக்கு எதிரான பல்வேறு கொடூர சம்பவங்கள் நடந்துள்ளன.

இதுபற்றிய அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட பெண்கள் ஒன்று கொல்லப்பட்டு உள்ளனர்.  அல்லது இதுபோன்ற 4 சம்பவங்களில் 

பெண்கள் தற்கொலை செய்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.  பெண்களின் பாதுகாப்பு பற்றிய இந்த சூழல் வருத்தம் அளிக்கிறது.

இதுபற்றி சிறப்பு கூட்டம் நடத்துவதற்கு முதல் மந்திரிக்கு நேரம் இல்லை.  ஆனால் அவரது புகைப்படங்களை எடுத்து 

வெளியிடுவதற்கு அவருக்கு நேரம் உள்ளது என்று யோகி ஆதித்யநாத் மீதும் சாடியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாட்டில் இதுவரை 2.27 கோடி கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன
நாட்டில் இதுவரை 2.27 கோடி கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்து உள்ளது.