தேசிய செய்திகள்

வடகர்நாடகத்தில் மேலும் 3 நாட்கள் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் + "||" + In North Karnataka The rain will continue for another 3 days Meteorological Center

வடகர்நாடகத்தில் மேலும் 3 நாட்கள் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

வடகர்நாடகத்தில் மேலும் 3 நாட்கள் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
வடகர்நாடகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் 8 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
பெங்களூரு,

வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்தழுத்த தாழ்வு நிலை காரணமாக வடகர்நாடகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் 8 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. 

குறிப்பாக வடகர்நாடகத்தில் உள்ள கலபுரகி, பீதர், ராய்ச்சூர், யாதகிரி, பெலகாவி, விஜயாப்புரா, பாகல்கோட்டை, கதக் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அந்த மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்‘ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கர்நாடகத்தில் மேலும் 3 நாட்கள் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள், பெலகாவி, கலபுரகி, பாகல்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்னும் 3 நாட்கள் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தார்வார், கதக், சிவமொக்கா, சிக்கமகளூரு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.