கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு 149 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் + "||" + IPL cricket Kolkata Knight Riders set a target of 149 for Mumbai

ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு 149 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு 149 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு 149 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
அபுதாபி,

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 32 வது ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகின்றன. இன்றைய ஆட்டம் அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதன்படி, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களை சேர்த்தது. கொல்கத்தா அணியில் பேட் கம்மின்ஸ் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 53 ரன்கள் அடிதார்.  இதையடுத்து, 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் கிரிக்கெட்: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.
2. ”கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம்” இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்த ஹர்திக் பாண்ட்யா
ஐபிஎல் தொடரில் ”கருப்பர்கள் வாழ்க்கை முக்கியம்” என்ற இயக்கத்திற்கு கிரிக்கெட் வீரர் ஒருவர் ஆதரவை வெளிப்படுத்துவது இதுதான் முதல் தடவையாகும்.
3. ஐபிஎல் 2020: பிளே ஆஃப் சுற்று, இறுதிப் போட்டி நடைபெறும் இடம், தேதி அறிவிப்பு
ஐபிஎல் தொடரில் ஏறக்குறைய லீக் ஆட்டங்கள் முடியும் நிலையில் இருக்கின்றன.
4. ஐபிஎல் தொடர்: லீக் சுற்றோடு சிஎஸ்கே வெளியேற்றம்- சாக்‌ஷி டோனி உருக்கமான பதிவு
இது ஒரு விளையாட்டு! யாரும் தோற்க விரும்புவதில்லை என சாக்‌ஷி டோனி பதிவிட்டுள்ளார்.
5. ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்ற எல்லா சீசனிலும் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) கால்பதித்த ஒரே அணி என்ற சென்னை சூப்பர் கிங்சின் பெருமை நேற்றோடு தகர்ந்து விட்டது