தேசிய செய்திகள்

நீட் தேர்வு முடிவுகள் அறிவிப்பு; 99.99% பெற்று முதல் இடம் பிடித்த ஒடிசாவின் சோயிப் அப்தப் + "||" + Notice of NEET Exam Results; Shoaib Aptab of Odisha topped the list with 99.99%

நீட் தேர்வு முடிவுகள் அறிவிப்பு; 99.99% பெற்று முதல் இடம் பிடித்த ஒடிசாவின் சோயிப் அப்தப்

நீட் தேர்வு முடிவுகள் அறிவிப்பு; 99.99% பெற்று முதல் இடம் பிடித்த ஒடிசாவின் சோயிப் அப்தப்
நீட் தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் ஒடிசாவின் சோயிப் அப்தப் 99.99% பெற்று முதல் இடம் பிடித்துள்ளார்.
புவனேஸ்வர்,

ஒவ்வொரு வருடமும் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான நீட் தேர்வு கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் 13ந்தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.

இந்த தேர்வுக்கு மொத்தம் 15.97 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 14.37 லட்சம் பேர் தேர்வை எழுதினர். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக தேர்வு மையங்களில் பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி தேர்வு நடத்தப்பட்டது.

இதேபோன்று, கொரோனாவால் நீட் தேர்வை எழுத முடியாமல் போனவர்களுக்காக கடந்த 14ந்தேதி இரண்டாம் கட்டமாக தேர்வு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டு கட்டமாக நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகளும் இன்று வெளியிடப்படும் என்று மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு வெளியிட்டார்.

தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ள தேர்வு முடிவுகளை, தேர்வர்கள் தங்களின் பதிவு எண்ணை உள்ளிட்டு அறிந்து கொள்ளலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நீட் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும்.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளிவந்தன.  இதுபற்றி தேசிய தேர்வு முகமை வெளியிட்டு உள்ள அறிவிப்பில், ஒடிசா மாநிலத்தின் சோயிப் அப்தப் என்ற மாணவர் 99.99% பெற்று முதல் இடம் பிடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு முதல்-அமைச்சர் அறிவிப்பு
புதுவையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.
2. வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் சட்டசபையில் மற்றொரு மசோதா கொண்டு வரப்படும்; காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
ராஜஸ்தான் சட்டசபையில் மத்திய அரசின் வேளாண்சட்டங்களுக்கு எதிராக மற்றொரு மசோதா கொண்டு வரப்படும் என காங்கிரசின் மூத்த தலைவர் வேணுகோபால் கூறியுள்ளார்.
3. மாநில மின் நிறுவனத்தில் 8 ஆயிரத்து 500 காலிபணியிடங்கள் நிரப்பப்படும் மந்திரி நிதின் ராவத் அறிவிப்பு
மராட்டிய மாநில மின் பகிர்மான நிறுவனத்தில் 8 ஆயிரத்து 500 காலிபணியிடங்கள் நிரப்பப்படும் என மின்சார துறை மந்திரி நிதின் ராவத் தெரிவித்து உள்ளார்.
4. புதுவை மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரி மாநில மக்களுக்கு அரசு சார்பில் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
5. மராட்டியத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வெள்ள நிவாரணம் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
மராட்டியத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிவாரணத்தை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.