கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தாவை எளிதில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் + "||" + MI thump KKR by 8 wickets to take top spot

ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தாவை எளிதில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தாவை எளிதில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியுள்ளது.
அபுதாபி, 

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

துபாயில் இன்று நடைபெற்ற  ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின்  32 வது ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி  மோதின. அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இப்போட்டியில்,   டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. 

கொல்கத்தா அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களை சேர்த்தது. கொல்கத்தா அணியில் பேட் கம்மின்ஸ் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 53 ரன்கள் அடித்தார்.  இதையடுத்து, 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது.  

துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா அணியை எளிதில் வீழ்த்தியது. 16.5 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து வெற்றியை ருசித்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக குயிண்டன் டி காக் ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் குவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் கிரிக்கெட்: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.
2. ”கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம்” இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்த ஹர்திக் பாண்ட்யா
ஐபிஎல் தொடரில் ”கருப்பர்கள் வாழ்க்கை முக்கியம்” என்ற இயக்கத்திற்கு கிரிக்கெட் வீரர் ஒருவர் ஆதரவை வெளிப்படுத்துவது இதுதான் முதல் தடவையாகும்.
3. ஐபிஎல் 2020: பிளே ஆஃப் சுற்று, இறுதிப் போட்டி நடைபெறும் இடம், தேதி அறிவிப்பு
ஐபிஎல் தொடரில் ஏறக்குறைய லீக் ஆட்டங்கள் முடியும் நிலையில் இருக்கின்றன.
4. ஐபிஎல் தொடர்: லீக் சுற்றோடு சிஎஸ்கே வெளியேற்றம்- சாக்‌ஷி டோனி உருக்கமான பதிவு
இது ஒரு விளையாட்டு! யாரும் தோற்க விரும்புவதில்லை என சாக்‌ஷி டோனி பதிவிட்டுள்ளார்.
5. ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்ற எல்லா சீசனிலும் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) கால்பதித்த ஒரே அணி என்ற சென்னை சூப்பர் கிங்சின் பெருமை நேற்றோடு தகர்ந்து விட்டது