மாநில செய்திகள்

விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு: 20 மாவட்டங்களில் 101 பேர் அதிரடி கைது + "||" + Scam in PM's financial assistance scheme for farmers: 101 arrested in 20 districts

விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு: 20 மாவட்டங்களில் 101 பேர் அதிரடி கைது

விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு: 20 மாவட்டங்களில் 101 பேர் அதிரடி கைது
விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக தமிழகத்தில் 20 மாவட்டங்களில் 101 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
சென்னை, 

விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக தமிழகத்தில் 20 மாவட்டங்களில் 101 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.105 கோடி அளவுக்கு பணம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டம் என்ற பெயரில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவி திட்டத்தில் தமிழகத்தில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இந்த முறைகேடு நடந்துள்ளதாக கண்டறியப்பட்டது. குறிப்பாக கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் இந்த முறைகேடு அதிக அளவில் அரங்கேற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை கைது செய்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிறைக்கு அனுப்பி வருகிறார்கள். இதுவரை நடந்த விசாரணையில் 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 69 பேர் இடைத்தரகர்கள். மீதி உள்ள 32 பேரில் 25 பேர் அரசு ஒப்பந்த பணியாளர்கள் ஆவார்கள். 7 பேர் மட்டும் நிரந்தர அரசு பணியில் இருந்தவர்கள்.

முறைகேடாக விவசாயிகள் பெயரில் நிதி உதவி பெற்றவர்களின் வங்கி கணக்கில் இருந்து ரூ.105 கோடி பணம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது முறைகேடாக பெற்ற நிதி உதவி தொகை என்று தெரிய வந்துள்ளது. மேற்கண்ட தகவல்கள் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. சாக்குலூத்துமெட்டு மலைப்பாதையில் சாலை அமைக்கக்கோரி விவசாயிகள் நடைபயணம் போலீசார் தடுத்ததால் பரபரப்பு
தேவாரம் அருகே சாக்குலூத்து மெட்டு மலைப்பாதையில் சாலை அமைக்கக்கோரி விவசாயிகள் நடைபயணம் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க தென்காசி மாவட்டத்தில் அணைகள் விரிவாக்கம் செய்யப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை கூடுதலாக சேமிக்கும் வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகள் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
3. நுண்ணீர் பாசனத்திற்கு மானியம் விவசாயிகள் பயன்பெற வேண்டுகோள்
தென்காசி மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத்திற்கு மானியம் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.
4. கரும்புக்கு நிலுவைத்தொகை வழங்கக்கோரி விவசாயிகள் நூதன போராட்டம்
கரும்புக்கு உரிய நிலுவை தொகையை வழங்கக்கோரி நேற்று தென்காசியில் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் உதவி கலெக்டரின் கடிதத்தால் போராட்டம் கைவிடப்பட்டது.
5. கொள்முதல் செய்யப்படாததால் சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியல் போக்குவரத்து பாதிப்பு
கொள்முதல் செய்யப்படாததால் தஞ்சை அருகே விவசாயிகள் நெல்லை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.