தேசிய செய்திகள்

பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரம் பிரதமர் மோடி 12 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார் + "||" + Prime Minister Modi speaks at 12 public meetings

பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரம் பிரதமர் மோடி 12 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்

பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரம் பிரதமர் மோடி 12 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்
சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், பீகாரில் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது.
பாட்னா, 

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு வருகிற 28-ந் தேதி, அடுத்த மாதம் (நவம்பர்) 3 மற்றும் 7-ந் தேதிகளில் என மூன்று கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதீய ஜனதா கூட்டணி ஒரு அணியாகவும், எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாகவும் சந்திக்கின்றன.

சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், பீகாரில் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது.

இந்தநிலையில் ஐக்கிய ஜனதா தளம், பாரதீய ஜனதா கூட்டணியை ஆதரித்து பீகாரில் வருகிற 23, 28, நவம்பர் 1, 3 ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி பிரசாரம் செய்கிறார். இந்த தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தின் போது 12 பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார்.

பிரதமர் மோடியின் வருகையின் காரணமாக பாரதீய ஜனதா மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.