மாநில செய்திகள்

சென்னையில் தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை மாற்றமின்றி விற்பனை: பெட்ரோல் ரூ.84.14, டீசல் ரூ.75.95 + "||" + Petrol and diesel prices in Chennai today

சென்னையில் தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை மாற்றமின்றி விற்பனை: பெட்ரோல் ரூ.84.14, டீசல் ரூ.75.95

சென்னையில் தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை மாற்றமின்றி விற்பனை: பெட்ரோல் ரூ.84.14, டீசல் ரூ.75.95
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 84.14 ரூபாய், டீசல் லிட்டருக்கு 75.95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

நாடு முழுதும் கொரோனா பரவலை தடுக்க மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

இந்நிலையில், பெட்ரோல் விலை 26வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை. டீசல் விலையிலும் 16வது நாளாக மாற்றம் செய்யப்படாமல் ஒரே விலையில் நீடிக்கிறது.

சென்னையில் தொடர்ந்து விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14க்கும், டீசல் ரூ.75.95க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. 

பெட்ரோல், டீசல் விலை கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மாற்றமின்றி காணப்படுவது வாகன ஓட்டிகளிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.