உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியை நெருங்குகிறது + "||" + From Corona worldwide The number of survivors is approaching 3 crore

உலகளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியை நெருங்குகிறது

உலகளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியை நெருங்குகிறது
உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியை நெருங்குகிறது.
வாஷிங்டன்,

சீனாவில் ஹூபேய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 95 லட்சமாக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 96 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்தனர். கொரோனாவால் இதுவரை 11 லட்சத்து 08 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.