உலக செய்திகள்

வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் தலை துண்டிப்பு: இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் என பிரான்ஸ் அதிபர் கண்டனம் + "||" + France: Teacher beheaded in Paris; President Macron calls it ‘Islamist terrorist attack’

வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் தலை துண்டிப்பு: இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் என பிரான்ஸ் அதிபர் கண்டனம்

வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் தலை துண்டிப்பு: இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் என  பிரான்ஸ் அதிபர் கண்டனம்
பிரான்சில் வகுப்பில் முகமது நபி குறித்து பாடம் நடத்திய ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்ட சம்பவத்திற்கு அந்நாட்டு அதிபர் மக்ரோன் லெபனான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாரீஸ்,

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள பள்ளி அருகே வரலாற்று ஆசிரியர் ஒருவர் முகமது நபியின் கேலிசித்திரங்கள் குறித்து பாடம் எடுத்தாக கூறி நேற்று மாலை 5 மணி அளவில் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதனால் மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மர்மநபரை சுட்டுக்கொன்றனர். 

இந்த தாக்குதல் குறித்து அந்நாட்டு அதிபர் மக்ரோன் லெபனான்,  இது ஒரு இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் என கண்டனம் தெரிவித்தார். மேலும் பயங்கரவாத்திற்கு எதிராக ஒட்டு மொத்த மக்களும் துணை நிற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 

இந்த தாக்குதல் குறித்து உயர் போலீஸ் அதிகாரிக் ஒருவர் கூறுகையில், 

தாக்குதல் நடத்திய மர்மநபரிடம் துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் இருந்தது. ஆயுதங்களை கீழே போடுமாறு நாங்கள் உத்தரவிட்டோம் அதற்கு மர்மநபர் மறுப்பு தெரிவித்தார். மேலும் அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.

இந்த சம்பவம் பிரான்சில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.