மாநில செய்திகள்

அதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழா: சேலம் சிலுவம்பாளையத்தில் கட்சி கொடியை ஏற்றிவைத்தார் முதலமைச்சர் பழனிசாமி + "||" + AIADMK 49th year inauguration: Chief Minister Palanisamy hoisted the party flag at Salem Siluvampalayam

அதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழா: சேலம் சிலுவம்பாளையத்தில் கட்சி கொடியை ஏற்றிவைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

அதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழா: சேலம் சிலுவம்பாளையத்தில் கட்சி கொடியை ஏற்றிவைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சேலம் சிலுவம்பாளையத்தில் முதலமைச்சர் பழனிசாமி கட்சி கொடியை ஏற்றிவைத்தார்.
சேலம்,

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அ.தி.மு.க. இன்று (சனிக்கிழமை) 49-வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இந்த தினத்தை அதிமுகவைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.


தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், பொன் விழா ஆண்டிலும் அதிமுக ஆட்சியை பிடித்து சாதனை படைக்கும் என்று தெரிவித்திருந்தனர். தமிழகம் முழுவதும் அதிமுகவினர் மாவட்ட கட்சி அலுவலகங்களில் அதிமுக கொடிகளை ஏற்றியும், இனிப்புகள் வழங்கியும் இன்றைய தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

இதனையடுத்து சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயல‌லிதா ஆகியோரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அதிமுக ஆட்சியை மக்கள் வீட்டிற்கு அனுப்புவர் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை
2021 -மே மாதத்தில் அதிமுக ஆட்சியை கோட்டையில் இருந்து மக்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2. எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி? நேர்முக உதவியாளர் மகாலிங்கம் தகவல்
அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி? என்ற நினைவுகளை அவருடைய நேர்முக உதவியாளர் மகாலிங்கம் பகிர்ந்து உள்ளார்.
3. 2021-ம் ஆண்டு தேர்தலில் தொடர் வெற்றி காண அயராது உழைப்போம்-எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களுக்கு வேண்டுகோள்
அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, 2021-ம் ஆண்டு தேர்தலில் தொடர் வெற்றிகாண அயராது உழைப்போம் என்று தொண்டர்களுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
4. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறி உள்ளார்.
5. புது வரலாறு படைப்போம்: தொண்டர்களுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு
புது வரலாறு படைப்போம் என அதிமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.