மாநில செய்திகள்

இலங்கையை சேர்ந்த நிழல் உலக தாதாக்கள் 10 பேர் தமிழ்நாட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் + "||" + It is reported that 10 shadow world donors are hiding in Tamil Nadu

இலங்கையை சேர்ந்த நிழல் உலக தாதாக்கள் 10 பேர் தமிழ்நாட்டில் பதுங்கி இருப்பதாக தகவல்

இலங்கையை சேர்ந்த நிழல் உலக தாதாக்கள் 10 பேர் தமிழ்நாட்டில் பதுங்கி இருப்பதாக தகவல்
இலங்கையை சேர்ந்த நிழல் உலக தாதாக்கள் சுமார் 10 பேர் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக தமிழக போலீசாருக்கு இன்டர்போல் "ரெட் அலர்ட்" எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சென்னை,

தமிழக கியூ பிராஞ்ச் போலீசாரால் இலங்கை நாட்டில் தேடப்பட்டு வந்த 'டான்' ஜெமினி‌ பொன்சேகா என்ற தாதா கைது செய்யப்பட்டார். ஏற்கனவே மற்றொரு நிழல் உலக தாதா அங்கோடா லொக்கா' தமிழகத்தில் உயிரிழந்தார். 

இதேபோல் கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் தேடப்பட்டு வரும் இலங்கையை சேர்ந்த நிழல் உலக தாதாக்கள் 10 பேர் தமிழ்நாட்டில் பதுங்கி இருப்பதாக தமிழக போலீசாருக்கு இன்டர்போல் "ரெட் அலர்ட்" எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.