மாநில செய்திகள்

4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம் தகவல் + "||" + Heavy rains expected in 4 districts - Meteorological Department

4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம் தகவல்

4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம் தகவல்
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி‌நேரத்தில், தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் வடமாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வ‌ரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

19 ஆம் தேதி மத்திய கிழக்கு மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக் கூடும் என்பதால், இப்பகுதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.