தேசிய செய்திகள்

காங்கிரசில் மாமியார், மருமகன்கள் சண்டைகள் நடந்து வருகின்றன; ஜே.பி. நட்டா பேச்சு + "||" + Nephews fights are going on in Congress; J.P. Natta talk

காங்கிரசில் மாமியார், மருமகன்கள் சண்டைகள் நடந்து வருகின்றன; ஜே.பி. நட்டா பேச்சு

காங்கிரசில் மாமியார், மருமகன்கள் சண்டைகள் நடந்து வருகின்றன; ஜே.பி. நட்டா பேச்சு
நமக்கு பா.ஜ.க. குடும்பம் என்றும் ஆனால் சிலருக்கு, குடும்பமே கட்சியாக உருமாறி உள்ளது என்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.
டேராடூன்,

உத்தரகாண்டில் பா.ஜ.க. கட்சி அலுவலக பூமி பூஜை மற்றும் அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது.  இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்பின் தொண்டர்கள் முன்னிலையில் நட்டா பேசும்பொழுது, அரசியல்வாதி ஒருவரின் இல்லத்தில் இருந்து ஒரு கட்சியின் அலுவலகம் இயங்குகிறது என்றால், அந்த கட்சி அவருக்கு உரியது என அர்த்தம்.  பிற கட்சிகளை எடுத்து கொண்டால், குடும்பமே கட்சியாக உருமாறி இருக்கிறது.

நம்மை எடுத்து கொண்டால் கட்சியானது நம்முடைய குடும்பம் ஆகியுள்ளது.  காங்கிரஸ் அல்லது பிற கட்சிகளாகட்டும், அவர்கள் தங்களது சகோதர, சகோதரிகளையும், தாய் மற்றும் மகன்களையும் காப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்குள்ளேயே மாமியார், மருமகன்கள் சண்டைகள் நடந்து வருகின்றன என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் கொரோனா வைரசின் 3வது அலை சாத்தியம்; சுகாதார மந்திரி
டெல்லியில் கொரோனா வைரசின் 3வது அலை ஏற்பட சாத்தியம் உள்ளது என்று மாநில சுகாதார மந்திரி கூறியுள்ளார்.
2. ஸ்பெயினில் உண்மையான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சம் இருக்கும்; பிரதமர் பேச்சு
ஸ்பெயின் நாட்டில் உண்மையான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்திற்கு மேல் இருக்கும் என அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.
3. ஏழைகளுக்கு 6 மாத ஆட்சியில் ரூ.23 ஆயிரம் கோடி வழங்கி உள்ளேன்; மத்திய பிரதேச முதல் மந்திரி
எனது 6 மாத கால ஆட்சியில் ஏழைகளுக்கு ரூ.23 ஆயிரம் கோடி வழங்கி உள்ளேன் என்று மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
4. மராட்டியத்தில் தீபாவளிக்கு முன் பள்ளிகள் திறக்கப்படாது; பள்ளி கல்வி மந்திரி
மராட்டியத்தில் தீபாவளி பண்டிகைக்கு முன் பள்ளி கூடங்கள் திறக்கப்படாது என்று பள்ளி கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட் கூறியுள்ளார்.
5. ஆண்களுக்கு பெண்களை மதிக்க கற்றுக்கொடுங்கள்; நடிகை ஆண்ட்ரியா
ஆண்களுக்கு பெண்களை மதிக்க கற்றுக்கொடுங்கள் என்று நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளார்.