கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு + "||" + Rajasthan Royals win the toss and elect to bat first against RCB

ஐபிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு

ஐபிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

துபாய்,  

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 33 வது ஆட்டத்தில் ஸ்டீவன் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. 

அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் பேட்டிங் தேர்வு செய்தார். இதன்படி பெங்களூரு அணி பந்து வீச்சைத்துவங்க உள்ளது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 ஆட்டத்தில் விளையாடி 3 வெற்றியும் ( சென்னை, பஞ்சாப், ஐதராபாத் அணிகளுக்கு எதிராக ), 5 தோல்வியும் கண்டு 6 புள்ளிகள் பெற்று பின்தங்கி இருக்கிறது. 

விராட்கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த முறை துடிப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த அணி 8 ஆட்டத்தில் ஆடி 5-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் அடைந்து 10 புள்ளிகள் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்ற எல்லா சீசனிலும் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) கால்பதித்த ஒரே அணி என்ற சென்னை சூப்பர் கிங்சின் பெருமை நேற்றோடு தகர்ந்து விட்டது
2. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் தொடரில் டோனி பங்கேற்கிறாரா?
பிசிசிஐயால் நடத்தப்படும் ஐபிஎல் போன்று ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் பிக் பாஷ் லீக் டி20 தொடர் நடைபெறுகிறது.
3. வீழ்ச்சியில் இருந்து மீளுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? மும்பை அணியுடன் இன்று மோதல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
4. ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தாவை பந்தாடியது பெங்களூரு
கொல்கத்தா அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் 14 புள்ளிகளுடன், பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் 2- ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
5. ஐபிஎல் கிரிக்கெட்: ஷிகர் தவான் புதிய சாதனை
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்து இரு சதங்களை விளாசி ஷிகர் தவான் புதிய சாதனை படைத்துள்ளார்.