மாநில செய்திகள்

நீட் பயிற்சி மையங்களை அரசு அதிகரிக்க வேண்டும்; தமிழக பா.ஜ.க. தலைவர் வலியுறுத்தல் + "||" + Government should increase NEET training centers; TN BJP Leader insistence

நீட் பயிற்சி மையங்களை அரசு அதிகரிக்க வேண்டும்; தமிழக பா.ஜ.க. தலைவர் வலியுறுத்தல்

நீட் பயிற்சி மையங்களை அரசு அதிகரிக்க வேண்டும்; தமிழக பா.ஜ.க. தலைவர் வலியுறுத்தல்
தமிழக அரசு நீட் பயிற்சி மையங்களை அதிகரித்து பயிற்சியை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில், பிரதமர் மோடியின் திட்டங்களை வெளிப்படுத்தும் கொலு பொம்மைகளை தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் திறந்து வைத்துள்ளார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசு, நீட் பயிற்சி மையங்களை அதிகரித்து, பயிற்சியை மேம்படுத்த வேண்டும்.  மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வரும் ‘நீட்’ தேர்வில் இந்த ஆண்டு தமிழக அளவில் தேர்வு எழுதிய 99,610 பேரில் 57,215 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.  இதனால், கடந்த ஆண்டைவிட 2,570 பேர் குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ராகுல்காந்தி மீதான வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் விஜயதரணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என விஜயதரணி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
2. அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் விளாத்திகுளம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
விளாத்திகுளம் வட்டார குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
3. கொரோனாவால் மரணம் அடைந்த முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு உதவித்தொகை குமாரசாமி வலியுறுத்தல்
கொரோனாவால் மரணம் அடைந்த முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு அரசு உடனே உதவித்தொகை வழங்க வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.
4. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை அரசு ஏற்க வேண்டும் சித்தராமையா வலியுறுத்தல்
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை அரசு ஏற்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
5. சொத்துவரி செலுத்துவோருக்கான ஊக்க தொகையை அதிகரிக்க வேண்டும்; மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
சொத்துவரி செலுத்துவோருக்கான ஊக்க தொகையை அதிகரிக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.