மாநில செய்திகள்

சொத்துவரி செலுத்துவோருக்கான ஊக்க தொகையை அதிகரிக்க வேண்டும்; மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல் + "||" + Increase incentives for property taxpayers; MK Stalin's insistence

சொத்துவரி செலுத்துவோருக்கான ஊக்க தொகையை அதிகரிக்க வேண்டும்; மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

சொத்துவரி செலுத்துவோருக்கான ஊக்க தொகையை அதிகரிக்க வேண்டும்; மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
சொத்துவரி செலுத்துவோருக்கான ஊக்க தொகையை அதிகரிக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில், அரசு கடந்த மார்ச்சில் இருந்து ஊரடங்கை அமல்படுத்தி வந்தது.  பின்னர் அவற்றில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.  எனினும், பொருளாதார தேக்கநிலையில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை.  இதனால், வேலை, தொழில், சுயதொழில், வர்த்தகம் உள்ளிட்டவை பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளன.

பொதுமக்களின் வருவாய் பெரிதும் குறைந்துள்ளது.  இந்நிலையில், மக்கள் தங்களது அன்றாட பணிகளை கவனிக்கவே வழியில்லாத சூழலில், அரையாண்டு சொத்துவரியை 15 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால் 2 சதவீத அபராத தொகை விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.

இதுபற்றி தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், அரையாண்டு சொத்துவரியை 15 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால் 2% அபராதம் என சென்னை மாநகராட்சி அறிவித்திருப்பது கொரோனா பாதிப்பு காலத்தில் மக்களை நச்சரிப்பதாகும்!  ஊழலின் ஊற்றுக்கண்ணான சென்னை மாநகராட்சியில் சொத்துவரி வசூலில் கெடுபிடிகள் ஏன்?  அவகாசத்தை 45 நாட்கள், ஊக்கத்தொகையை 10% என அதிகரித்திடுக! என்று அவர் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ராகுல்காந்தி மீதான வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் விஜயதரணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என விஜயதரணி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
2. அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் விளாத்திகுளம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
விளாத்திகுளம் வட்டார குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
3. கொரோனாவால் மரணம் அடைந்த முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு உதவித்தொகை குமாரசாமி வலியுறுத்தல்
கொரோனாவால் மரணம் அடைந்த முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு அரசு உடனே உதவித்தொகை வழங்க வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.
4. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை அரசு ஏற்க வேண்டும் சித்தராமையா வலியுறுத்தல்
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை அரசு ஏற்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
5. நீட் பயிற்சி மையங்களை அரசு அதிகரிக்க வேண்டும்; தமிழக பா.ஜ.க. தலைவர் வலியுறுத்தல்
தமிழக அரசு நீட் பயிற்சி மையங்களை அதிகரித்து பயிற்சியை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் வலியுறுத்தியுள்ளார்.