மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மேலும் 4,295 பேருக்கு கொரோனா பாதிப்பு - தமிழக சுகாதார துறை தகவல் + "||" + Corona affects 4,295 more people in Tamil Nadu today - Tamil Nadu Health Department

தமிழகத்தில் இன்று மேலும் 4,295 பேருக்கு கொரோனா பாதிப்பு - தமிழக சுகாதார துறை தகவல்

தமிழகத்தில் இன்று மேலும் 4,295 பேருக்கு கொரோனா பாதிப்பு - தமிழக சுகாதார துறை தகவல்
தமிழகத்தில் புதிதாக 4,295 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சென்னை, 

தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று புதிதாக 4,295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,83,486 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 57 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,586 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 5,005 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,32,708 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 40,192 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று ஒருநாளில் 1,132 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்: புதிதாக 2,516 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் இன்று மேலும் 2,516 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
தமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
3. தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
4. தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
5. தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக மின் உற்பத்தியாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.