உலக செய்திகள்

அமெரிக்காவின் ஜனநாயக கட்சி துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் நவராத்திரி திருவிழா வாழ்த்து + "||" + Democratic Vice Presidential Candidate Kamala Harris Congratulates Navratri Festival

அமெரிக்காவின் ஜனநாயக கட்சி துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் நவராத்திரி திருவிழா வாழ்த்து

அமெரிக்காவின் ஜனநாயக கட்சி துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் நவராத்திரி திருவிழா வாழ்த்து
அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் நவராத்திரி கொண்டாடும் இந்து அமெரிக்க நண்பர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் இருந்து வருகிறார்.  அவரது பதவி காலம் வருகிற நவம்பருடன் முடிவடைகிறது.  இதனை முன்னிட்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 3ந்தேதி நடைபெற உள்ளது.  இதற்காக குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சியினரிடையே கடுமையான போட்டி ஏற்பட்டு உள்ளது.  இரு கட்சியினரும் தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

இதில், ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தின் சென்னையை சேர்ந்த இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

அவர் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.  அவர் வெளியிட்டு உள்ள செய்தியில், நம்முடைய இந்து அமெரிக்க நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மற்றும் நவராத்திரியை கொண்டாடும் அனைவருக்கும் மகிழ்ச்சியான விழாவாக அமைய வாழ்த்துகிறேன்.

நம்முடைய சமூகங்கள் மற்றும் அமெரிக்காவை அதன் நிலையிலிருந்து உயர்த்துவதற்கும், கட்டியெழுப்புவதற்கும் நாம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் இந்த விடுமுறை அமையட்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 56வது எழுச்சி நாள்; எல்லை பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து
56வது எழுச்சி நாளை முன்னிட்டு எல்லை பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரி அமித்ஷா வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
2. நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் வளம் நிறைந்த புது ஆண்டாக அமையட்டும்; ஜோ பைடன் தீபாவளி வாழ்த்து
அமெரிக்க அதிபராக தேர்வான ஜோ பைடன் நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் வளம் நிறைந்த புது ஆண்டாக அமையட்டும் என தனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
3. கவர்னர் கிரண்பெடி, நாராயணசாமி தீபாவளி வாழ்த்து
கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
4. மியான்மர் தேர்தல்; வெற்றி பெற்ற சூகிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
மியான்மர் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆங் சான் சூகிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து கொண்டார்.
5. ஐ.பி.எல்.லில் 200வது போட்டி; தோனிக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து
ஐ.பி.எல்.லில் 200வது போட்டியை விளையாடும் முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள தோனிக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்து உள்ளார்.