தேசிய செய்திகள்

ப.சிதம்பரத்துக்கு பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பா? பா.ஜ.க. தலைவர் குற்றச்சாட்டால் பரபரப்பு + "||" + BJP hits out at PC over his call for restoration of Article 370

ப.சிதம்பரத்துக்கு பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பா? பா.ஜ.க. தலைவர் குற்றச்சாட்டால் பரபரப்பு

ப.சிதம்பரத்துக்கு பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பா? பா.ஜ.க. தலைவர் குற்றச்சாட்டால் பரபரப்பு
காங்கிரஸ்காரர்கள் எப்போதும் நாட்டின் முதுகில் குத்திக்கொண்டிருக்கிறார்கள்” என காஷ்மீர் யூனியன் பிரதேச பா.ஜ.க. தலைவர் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.
ஜம்மு, 

முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், “காஷ்மீர் மக்களின் சிறப்பு அந்தஸ்து மற்றும் உரிமைகளை திரும்ப கிடைக்கச்செய்வதற்கும், கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி நரேந்திர மோடி அரசின் தன்னிச்சையான, அரசியல் சாசனத்துக்கு எதிரான முடிவை திரும்பப்பெறவும் காங்கிரஸ் கட்சி உறுதியுடன் நிற்கிறது” என்று கூறி இருந்தார்.

இதற்கு காஷ்மீர் யூனியன் பிரதேச பா.ஜ.க. தலைவர் ரவீந்தர் ரெய்னா பதிலடி கொடுத்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “ப.சிதம்பரத்துக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ.யுடனும், நக்சலைட்டுகளுடனும் தொடர்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகம் உள்ளது. காங்கிரஸ்காரர்கள் எப்போதும் நாட்டின் முதுகில் குத்திக்கொண்டிருக்கிறார்கள்” என குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.

ப.சிதம்பரம், திக்விஜய்சிங் போன்றவர்கள் நாட்டுக்கு எதிராக பேசுவதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அவரது மகன் ராகுலும் நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். ப.சிதம்பரம் மீதான பா.ஜ.க. தலைவரின் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பெண் மந்திரி பற்றி சர்ச்சை கருத்து: கமல்நாத் மீது காங். நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல்
பா.ஜனதா பெண் மந்திரி மீது சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கமல்நாத் மீது சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் கோரிக்கை விடுத்துள்ளார்.
2. பா.ஜனதா தலைவர் தொடர்ந்த சசிதரூருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை- டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
பா.ஜனதா தலைவர் தொடர்ந்த சசிதரூருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு டெல்லி ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
3. பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்: டெல்லி புறப்பட்டுச் சென்றார் நடிகை குஷ்பு
நடிகை குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானதையடுத்து தற்போது டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
4. டிக் டாக் செயலிக்கு பாகிஸ்தானிலும் தடை விதிப்பு
ஒழுக்க கேடான மற்றும் அநாகரிகமான வீடியோக்கள் வெளியாவதாக கூறி, பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் டிக் டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது.
5. பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு- தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை
பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார்.