தேசிய செய்திகள்

பட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இடம்- மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல் + "||" + India Ranks 94 Out Of 107 Nations In Global Hunger Index, Categorised 'Serious'

பட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இடம்- மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்

பட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இடம்- மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
உலகளாவிய பட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இடம் வகிக்கிறது. இதற்காக மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடி உள்ளார்.
புதுடெல்லி, 

உலகளாவிய பட்டினி குறியீட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணையானது, உலகெங்கும் உள்ள பட்டினி அளவையும், ஊட்டச்சத்து குறைபாட்டு அளவையும் கொண்டுள்ளது. 107 நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் இந்தியா 94-வது இடத்தில் உள்ளது.கடந்த ஆண்டு 102 நாடுகளில் இந்தியா 94-வது இடத்தில் இருந்தது. எனவே இந்தியா நடப்பு ஆண்டில் சற்றே முன்னேற்றம் கண்டுள்ளது.

இருப்பினும் பாகிஸ்தான் (88-வது இடம்), வங்காளதேசம் (75-வது இடம்) ஆகிய நாடுகளைவிட இந்தியா பின்தங்கி இருக்கிறது. இந்தியாவை விட 13 நாடுகள் மோசமான நிலையில் உள்ளன. அந்த நாடுகளில் ருவாண்டா (97), நைஜீரியா (98), லிபியா (102), மொசாம்பிக் (103), சாட் (107) அடங்கும். 107 நாடுகளில் இந்தியாவின் மொத்த புள்ளிகள் 27.2 ஆகும். இது இந்தியாவை தீவிரமான பட்டினி பிரிவில் வைத்துள்ளது. இந்த அட்டவணையின்படி, இந்தியாவில் 14 சதவீத மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்தியாவின் பட்டினி நிலை கண்டு மத்திய அரசு மீது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடி உள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் நேற்று வெளியிட்ட ஒரு பதிவில், “இந்தியாவில் ஏழை மக்கள் பட்டினி கிடக்கிறார்கள். ஏனென்றால் அரசு, தனது சிறப்பு நண்பர்களில் சிலரது பைகளை நிரப்புவதில் தீவிரமாக உள்ளது” என கூறி உள்ளார். உலகளாவிய பட்டினி குறியீட்டு அட்டவணை வரைபடத்தையும் டுவிட்டரில் ராகுல் காந்தி இணைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்கு சவுதி அரேபியா தீபாவளி பரிசு: கில்கிட்-பலுசிஸ்தான் -காஷ்மீரை பாகிஸ்தானின் வரைபடத்திலிருந்து நீக்கியது
இந்தியாவுக்கு சவுதி அரேபியாவின் தீபாவளி பரிசு - கில்கிட்-பலுசிஸ்தான் மற்றும் காஷ்மீரை பாகிஸ்தானின் வரைபடத்திலிருந்து நீக்கி உள்ளது.
2. இந்தியாவுடனான எல்லை பிரச்சினையில் மூன்றாம் தரப்புக்கு இடமில்லை; சீனா கொந்தளிப்பு
இந்திய மக்கள் அச்சுறுத்தல்களை சந்திப்பதால், அமெரிக்கா அவர்களுடன் நிற்கும் என சீனாவை குறிவைத்து அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி நேற்று பேசியிருந்தார்.
3. சீனாவுக்கும் பிராந்திய நாடுகளுக்கும் இடையில் அமெரிக்கா கருத்து வேறுபாட்டை விதைக்கிறது - சீனா சீற்றம்
சீனாவுக்கும் பிராந்திய நாடுகளுக்கும் இடையில் அமெரிக்கா கருத்து வேறுபாட்டை விதைத்ததாக சீனா குற்றம் சாட்டி உள்ளது.
4. கொரோனா தொற்று பாதிப்பு:இந்தியாவில் குழந்தைகள் கடத்தல் அதிகரிப்பு
கொரோனா தொற்றுநோய் இந்தியாவில் குழந்தைகள் கடத்தல் என்ற இரண்டாவது நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
5. காங்.ஆளும் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமை நடைபெற்றால் ராகுல் காந்தி ஏன் அங்கு செல்வதில்லை? நிர்மலா சீதாராமன் கேள்வி
எந்த ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவமும் அரசியலாக்கப்படக்கூடாது என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.