மாநில செய்திகள்

இடஒதுக்கீடு விவகாரத்தில் அலட்சியம்: சம்பந்தப்பட்டவர்கள் அரசியல் ரீதியாக கடும் விலையை கொடுப்பார்கள் - கி.வீரமணி கண்டனம் + "||" + Ignorance in reservation issue: Those involved will pay a heavy price politically - K. Veeramani condemned

இடஒதுக்கீடு விவகாரத்தில் அலட்சியம்: சம்பந்தப்பட்டவர்கள் அரசியல் ரீதியாக கடும் விலையை கொடுப்பார்கள் - கி.வீரமணி கண்டனம்

இடஒதுக்கீடு விவகாரத்தில் அலட்சியம்: சம்பந்தப்பட்டவர்கள் அரசியல் ரீதியாக கடும் விலையை கொடுப்பார்கள் - கி.வீரமணி கண்டனம்
இடஒதுக்கீடு ஒப்புதல் வழங்குவதில் காட்டப்படும் அலட்சியத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் அரசியல் ரீதியாக கடும் விலையை கொடுப்பார்கள் என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அமைச்சரவை, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான தனிச் சட்டம் ஒன்றை கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இப்போது 45 நாட்களுக்கு மேலாக அது கவர்னரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.


இது தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் தமிழக அரசு வக்கீலிடம், “கவர்னரிடம் ஒரு மாதத்திற்கும் மேல் கோப்பு ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. மாணவர் சேர்க்கைக்கு இந்த ஆண்டு பயன்பெறச் செய்ய வேண்டாமா?” என்று உருக்கத்துடன் கேள்வி எழுப்பி உள்ளனர். அப்போது மூத்த நீதிபதி கிருபாகரன் கண்களில் நீர் வழிந்தோடியது என்று செய்திகள் கூறுகின்றன.

இந்த நிலையில், தமிழக அரசு ஒரு நிலைப்பாட்டை எடுத்து, அந்த இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வரும் வரை இவ்வாண்டு கலந்தாய்வு நடைபெறாது என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. அல்லல்பட்டு ஆற்றாது ஏழைகள் அழும் கண்ணீருடன் நீதிபதிகள் கண்ணீரும் இணையும் நிலை ஒருபோதும் வீணாகிவிடாது. இதில் காட்டப்படும் அலட்சியத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் கடும் விலையை அரசியல் ரீதியாக கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புகளில் 50% இடஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புகளில் 50% இடஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
2. “இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரின் காலதாமதம் அர்த்தமற்றது” - இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன்
7.5 சதவீத இட ஒதுக்கீட்டுச் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் தராமல் காலதாமதப்படுத்தியது அர்த்தமற்ற செயல் என்று இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார்.
3. மருத்துவ படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
4. ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!
ஓபிசி பிரிவினருக்கு தமிழக அரசின் இடஒதுக்கீடு முறையை, மத்திய அரசு பணியிலும் பின்பற்ற வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
5. அரியானாவில் தனியார் பணிகளில் இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு; அமைச்சரவை ஒப்புதல்
அரியானாவில் தனியார் பணிகளில் இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு அளிக்கும் வரைவு மசோதாவுக்கு அமைச்சரவையில் இன்று ஒப்புதல் வழங்கப்பட்டது.