மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: மேலும் 3 மாதம் கால அவகாசம் வேண்டும் - அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் + "||" + Inquiry into Jayalalithaa's death: 3 more months needed - Arumugasami Commission letter to the government

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: மேலும் 3 மாதம் கால அவகாசம் வேண்டும் - அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: மேலும் 3 மாதம் கால அவகாசம் வேண்டும் - அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்
உச்சநீதிமன்றத்தில் அப்போலோ தரப்பின் மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை தாமதமாவதை அரசு வழக்கறிஞர்கள் வேடிக்கை பார்ப்பதாக ஆறுமுகசாமி ஆணையம் புகார் தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 8வது முறையாக தரப்பட்ட அவகாசம் வரும் 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையில் ஏற்படும் காலதாமதத்தால், ஆணையத்தின் காலக்கெடுவை மேலும் 3 மாதம் நீட்டிக்க ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசிற்கு கடிதம் எழுதியுள்ளது.


அந்த கடிதத்தில் வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரும் மனு, நீதிமன்ற தடை ஆணையை நீக்கக்கோரும் மனு உள்ளிட்ட மனுக்களை உரிய நேரத்தில் தாக்கல் செய்யவில்லை என்று ஆணையம் புகார் தெரிவித்துள்ளது. மேலும் அப்போலோ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கை ஒத்திவைக்கக் கோரும் போது, வழக்கு விசாரணை தாமதமாவதை குறைந்தபட்ச ஆட்சேபனை கூட தெரிவிக்காமல் அரசு வழக்கறிஞர்கள் வேடிக்கை பார்ப்பதாகவும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

எனவே வரும் 24 தேதியுடன் முடிய உள்ள கால அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என ஆறுமகசாமி ஆணையம் அரசுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெயலலிதா மரணத்திற்கு திமுக காரணம் என அதிமுக பொய் பிரசாரம் - திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
ஜெயலலிதா மரணத்திற்கு திமுக காரணம் என அதிமுக பொய் பிரசாரம் செய்வதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
2. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு அவகாசம் நீட்டிப்பு
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
3. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்; கோவையில் நடந்த மக்கள் கிராம சபைக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கோவை அருகே நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
4. திமுக தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை மிக முக்கிய அம்சமாக இருக்கும்- மு.க.ஸ்டாலின்
திமுக தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை மிக முக்கிய அம்சமாக இருக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.