உலக செய்திகள்

இந்தியா உள்பட 6 நாடுகளில் தேடப்படும் பயங்கரவாதி சஜீத் மிர் பற்றிய பகீர் பின்னணி + "||" + Pakistan background on terrorist Sajid Mir wanted in 6 countries including India

இந்தியா உள்பட 6 நாடுகளில் தேடப்படும் பயங்கரவாதி சஜீத் மிர் பற்றிய பகீர் பின்னணி

இந்தியா உள்பட 6 நாடுகளில் தேடப்படும் பயங்கரவாதி சஜீத் மிர் பற்றிய பகீர் பின்னணி
இந்தியா உள்பட 6 நாடுகளில் தேடப்படும் சஜீத் மிர் என்ற பயங்கரவாதிக்கு பாகிஸ்தான் அடைக்கலம் வழங்கி உள்ளது என ஜிகாத் வாட்ச் என்ற அமைப்பு தெரிவித்து உள்ளது.
இஸ்லாமாபாத்,

மராட்டியத்தின் மும்பை நகரில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ந்தேதி பயங்கரவாதிகள் புகுந்து பொதுமக்கள் மீது அதிரடியாக துப்பாக்கி சூடு நடத்தி தாக்குதலில் ஈடுபட்டனர்.  இதில் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 160க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை திட்டமிட்டு நடத்திய நபர்களில் ஒருவன் சஜீத் மிர்.  லஷ்கர் இ தொய்பாவின் வெளிநாட்டு சொத்துகளை நிர்வகிக்கும் பணியிலும் ஈடுபட்டு வரும் மிர், இந்தியாவை தவிர்த்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், டென்மார்க் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் தாக்குதலை நடத்தியுள்ளான்.  எப்.பி.ஐ.யின் தேடப்படும் நபர்களின் பட்டியலிலும் சஜீத்தின் பெயர் உள்ளது.

போலீசாரால் குற்றம் சாட்டப்பட்ட சஜீத்தின் முகம் அடங்கிய புகைப்படங்கள் கிடைத்தபோதிலும், எந்த உளவு அமைப்புகளாலும் சஜீத்தின் இருப்பிடம் பற்றிய தகவலை கண்டறிய முடியவில்லை.

அரசியல் ஆய்வாளர் ஷுஜா நவாஸ் கூறும்பொழுது, அமெரிக்க அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் நாட்டிற்குள் செயல்படும் தலீபான், ஹக்கானி நெட்வொர்க் பற்றிய சான்றுகளை அளித்தபோதிலும், ஒரு தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

சில அறிக்கைகள், சஜீத் தனது 16 வயதிலேயே லஷ்கர் இ தொய்பா அமைப்பில் இணைந்து வெகுவிரைவில் உயரிய பதவியை அடைந்து விட்டான் என கூறுகின்றன.  ஆனால் நம்பகத்தன்மை வாய்ந்த வேறு சில அறிக்கைகளின்படி, சஜீத் ஒரு பாகிஸ்தான் ராணுவ வீரர் அல்லது ஐ.எஸ்.ஐ. உறுப்பினர் அல்லது அதிகாரியாக இருக்க வேண்டும்.  லஷ்கர் இ தொய்பாவுடன் நெருங்கியிருந்து பணியாற்றுபவனாக இருக்க வேண்டும் என தெரிவிக்கின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானிலேயே வளர்ந்த உள்நாட்டு பயங்கரவாதிகள் மற்றும் அந்நிய நாட்டு பயங்கரவாதிகளை பாதுகாக்கும் முயற்சியில், சர்வதேச பயங்கரவாத நிதி ஒழிப்பு கண்காணிப்பகம் ஆன எப்.ஏ.டி.எப்.-ன் கருப்பு பட்டியலில் இடம் பெறாமல் தவிர்க்க அந்த நாடு, தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பயங்கரவாதத்தினை எதிர்கொள்ள மேற்கொண்டு வரும் முயற்சிகள் என பாகிஸ்தான் வெளித்தோற்றம் ஏற்படுத்த முயற்சித்தபோதிலும், மேற்கூறிய சர்வதேச அமைப்பினை ஏமாற்றும் முயற்சியில் அந்நாடு ஈடுபட்டு வருகிறது என ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.