மாநில செய்திகள்

போராட்டங்களுக்கு டிராக்டரை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: தேனி மாவட்ட காவல்துறை + "||" + Strict action if tractor is used for protests: Theni District Police

போராட்டங்களுக்கு டிராக்டரை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: தேனி மாவட்ட காவல்துறை

போராட்டங்களுக்கு டிராக்டரை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: தேனி மாவட்ட காவல்துறை
போராட்டங்களுக்கு டிராக்டரை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை, 

விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி வேளாண் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த சட்டத்தை கண்டித்து பஞ்சாப், அரியானா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 

வேளாண் சட்டங்களை எதிர்த்தும் ஹத்ராஸ் சம்பவங்களை கண்டித்தும் நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வேளாண்மை சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனியில் நாளை காங்கிரஸ் கட்சி சார்பாக அக்கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் டிராக்டரில் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் போராட்டங்களுக்கு டிராக்டரை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.