கிரிக்கெட்

ஐபிஎல் டி20 கிரிக்கெட்: சூப்பர் ஒவரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி + "||" + IPL T20 Cricket: Kolkata Knight Riders win Super Over

ஐபிஎல் டி20 கிரிக்கெட்: சூப்பர் ஒவரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி

ஐபிஎல் டி20 கிரிக்கெட்: சூப்பர் ஒவரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சூப்பர் ஒவரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றிபெற்றது.
அபுதாபி, 

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 35வது ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான ஜதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியின் சார்பில் சுப்மன் கில் 36 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக நடராஜன் 2 விக்கெட்டுகளும், விஜய் சங்கர் மற்றும் ரஷித் கான், பாசில் தம்பி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சார்பில் பேரிஸ்டோவ் மற்றும் கேன் வில்லியம்சம் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதிரடியாக துவங்கிய இந்த ஜோடியில் கேன் வில்லியம்சன் 29(19) ரன்களும், அடுத்து களமிறங்கிய கார்க் 4(7) ரன்னும், சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பேரிஸ்டோவ் 36(28) ரன்களும், மணீஷ் பாண்டே 6(7) ரன்னும், விஜய் சங்கர் 7(10) ரன்னும், அப்துல் சமத் 23(15) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
 
இறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் டேவிட் வார்னர் 47(33) ரன்களும், ரஷித் கான் 1(2) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் ஐதராபாத் அணி 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியின் சார்பில் அதிகபட்சமாக ஃபர்குசன் 3 விக்கெட்டுகளும், பேட் கம்மின்ஸ், ஷிவம் மாவி மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.  

பின்னர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், சூப்பர் ஓவரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
2. ஐபிஎல் டி20 கிரிக்கெட்: கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு 177 ரன்கள் வெற்றி இலக்கு
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை அணி எதிரான ஆட்டத்தில், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு 177 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. ஐபிஎல் டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
4. ஐபிஎல் டி20 கிரிக்கெட்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்கு
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5. ஐபிஎல் டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.