கிரிக்கெட்

ஐபிஎல் டி20 கிரிக்கெட்: கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு 177 ரன்கள் வெற்றி இலக்கு + "||" + IPL T20 Cricket: Kings XI Punjab set a target of 177 for victory

ஐபிஎல் டி20 கிரிக்கெட்: கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு 177 ரன்கள் வெற்றி இலக்கு

ஐபிஎல் டி20 கிரிக்கெட்: கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு 177 ரன்கள் வெற்றி இலக்கு
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை அணி எதிரான ஆட்டத்தில், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு 177 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
துபாய், 

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 36வது ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின. 

டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி களமிறங்கிய மும்பை அணியின் சார்பில் ரோகித் சர்மா மற்றும் டி காக் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர், இந்த ஜோடியில் ரோகித் சர்மா 9(8) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் (0) ரன் ஏதும் எடுக்காமலும், இஷான் கிஷான் 7(7) ரன்களும், அடுத்து களமிறங்கி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்ணால் பாண்ட்யா 34(30) ரன்களும் எடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா 8(4) ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடி தனது அரைசதத்தை பதிவு செய்த டி காக் 53(43) ரன்களில் கேட்ச் ஆனார். 

இறுதியில் அதிரடி காட்டிய பொல்லார்டு 34(12) ரன்களும், கெளல்டர் நைல் 24(12) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக முகமது சமி மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன்மூலம் மும்பை அணி எதிரான ஆட்டத்தில், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு 177 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
2. ஐபிஎல் டி20 கிரிக்கெட்: சூப்பர் ஒவரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சூப்பர் ஒவரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றிபெற்றது.
3. ஐபிஎல் டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
4. ஐபிஎல் டி20 கிரிக்கெட்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்கு
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5. ஐபிஎல் டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.