கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டி; 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் டேவிட் வார்னர் + "||" + IPL Competition; David Warner, the first foreign player to score 5,000 runs

ஐ.பி.எல். போட்டி; 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் டேவிட் வார்னர்

ஐ.பி.எல். போட்டி; 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் டேவிட் வார்னர்
ஐ.பி.எல். போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பெற்றுள்ளார்.
அபுதாபி, 

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 35வது ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான ஜதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் விளையாடின.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளார். இதன்படி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது.

இதன்பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடியது.  முடிவில் ஐதராபாத் அணி 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது.  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், சூப்பர் ஓவரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.

எனினும், இறுதி வரையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் 5 பவுண்டரிகளுடன் 47 (33) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் சாதனையும் படைத்துள்ளார்.  இந்த போட்டியில் டேவிட் வார்னர் 5 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.  அவருக்கு முன் விராட் கோலி (5,759), ரெய்னா (5,368) மற்றும் ரோகித் சர்மா (5,149) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.  எனினும், வார்னர் மற்ற வீரர்களை விட குறைவான போட்டிகளில் விளையாடி (135), அதிவேகமாக 5 ஆயிரம் ரன்கள் என்ற இலக்கை கடந்துள்ளார்.

இதேபோன்று, ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையையும் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பெற்றுள்ளார்.