மாநில செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் மருத்துவ கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடை மறுப்பதா? - கி.வீரமணி கண்டனம் + "||" + Is the denial of reservation for the backward in medical education even after the Supreme Court has ordered it? - K. Veeramani condemned

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் மருத்துவ கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடை மறுப்பதா? - கி.வீரமணி கண்டனம்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் மருத்துவ கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடை மறுப்பதா? - கி.வீரமணி கண்டனம்
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் மருத்துவ கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடை மறுப்பதா என்று கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை, 

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும், மத்திய அரசின் சார்பில் மருத்துவ கல்வியில் உயர் சிறப்பு பட்டப்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்க முடியாது என்று திட்டவட்டமாக பா.ஜ.க. அரசு தெரிவித்திருப்பது மிகவும் அதிர்ச்சிக்குரியது. சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியும் உதாசீனம் செய்து தூக்கி எறியும் அளவுக்கு சமூகநீதி எதிர்ப்பு என்பதில் மத்திய பா.ஜ.க. அரசு பித்துப்பிடித்து அலைவதாக தெரிகிறது.

தமிழகத்தில் இருந்து அளிக்கப்பட்ட மத்திய மருத்துவ தொகுப்புக்கான இடங்களிலும் இடஒதுக்கீடு அறவே அளிக்கமுடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பையும் அலட்சியப்படுத்தும் நிலைக்கு சென்றுவிட்டது மத்திய அரசு. அதே நேரத்தில், உயர்சாதியில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்ற பெயரால் சட்ட விரோதமான செயலில் அவசர அவசியமாக கருதி, உடனே செயல்படுத்தியும் விட்டது.

மண்டல் குழு பரிந்துரையைச் செயல்படுத்த இந்திய அளவில் பேரெழுச்சி அலையை ஏற்படுத்தி, வெற்றி பெற்றதுபோல, தற்போதும் பெரிய அளவிலான இயக்கத்தை அகில இந்திய அளவில் நடத்தவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். பா.ஜ.க.வின் இந்த இரட்டை வேடத்தை அம்பலப்படுத்த வேண்டிய தருணம் இது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகள் நலனை பலிபீடத்தில் நிறுத்துவதை தடுத்தாக வேண்டும் - கி.வீரமணி அறிக்கை
விவசாயிகள் நலனை பலிபீடத்தில் நிறுத்துவதை தடுத்தாக வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.