மாநில செய்திகள்

நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 10 முக்கிய குற்றவாளிகளின் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை - ஆதார் ஆணையம் கைவிரித்தது + "||" + Neet to exam Involved in abuse The details of the 10 main culprits could not be traced The Aadhaar Commission handed over

நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 10 முக்கிய குற்றவாளிகளின் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை - ஆதார் ஆணையம் கைவிரித்தது

நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 10 முக்கிய குற்றவாளிகளின் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை - ஆதார் ஆணையம் கைவிரித்தது
நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 10 முக்கிய குற்றவாளிகளின் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆதார் ஆணையம் கைவிரித்து விட்டதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.
சென்னை, 

இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நீட் தேர்வு முறைகேடு வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர். இந்த வழக்கில் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர் மற்றும் இடைத்தரகர்கள் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட 10 தேடப்படும் முக்கிய குற்றவாளிகளின் பெயர் பட்டியலை புகைப்படத்துடன் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வெளியிட்டனர். இவர்கள் பற்றிய உண்மையான விவரங்களை கண்டு பிடித்து கைது செய்ய, சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர்.

இதற்காக பெங்களூருவில் உள்ள ஆதார் ஆணையத்துக்கு 10 குற்றவாளிகளின் புகைப்படங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுப்பி வைத்தனர். புகைப்படத்தை வைத்து 10 குற்றவாளிகளின் விவரங்களை ஆதார் ஆணையம் ஆய்வு செய்தது.

தற்போது சி.பி.சி.ஐ.டி.போலீசாருக்கு ஆதார் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில், புகைப்படங்களை அடிப்படையாக வைத்து 10 முக்கிய குற்றவாளிகளின் உண்மையான விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவித்து விட்டதாக, சி.பி. சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

இதனால் முக்கியமான 10 குற்றவாளிகளை கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. டாக்டராக வேண்டும் என்ற எனது கனவுக்கு ‘தினத்தந்தி’யின் கல்வி நிதி ஊக்கம் அளித்தது- ‘நீட்’ தேர்வில் சாதனை படைத்த மாணவர் ஜீவித்குமார் நெகிழ்ச்சி
டாக்டராக வேண்டும் என்ற எனது கனவுக்கு ‘தினத்தந்தி’யின் கல்வி நிதி ஊக்கம் அளித்ததாக ‘நீட்’ தேர்வில் சாதனை படைத்த தேனி மாணவர் ஜீவித்குமார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
2. கல்வித்துறை பயிற்சி வகுப்பில் பயின்ற அரசு பள்ளி மாணவர்கள் 1,615 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி
நீட் தேர்வில் கல்வித்துறை பயிற்சி வகுப்புகளில் பயின்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 1,615 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
3. ‘நீட்’ தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை முயற்சி
செஞ்சியில் ‘நீட்’ தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
4. நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 738 பேர் தேர்ச்சி
நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 738 பேர் தேர்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5. நீட் தேர்வில் ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் சாதனை ஓ.பன்னிர்செல்வம் வாழ்த்து
ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஜீவித் குமார், 2020 நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளார்.