தேசிய செய்திகள்

இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை- இந்த வாரம் நடைபெற வாய்ப்பு + "||" + India-China prepare for 8th round of military commanders’ talks next week

இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை- இந்த வாரம் நடைபெற வாய்ப்பு

இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை- இந்த வாரம் நடைபெற வாய்ப்பு
இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 8-வது சுற்று பேச்சுவார்த்தை இந்த வாரம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக ராணுவ வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
புதுடெல்லி, 

கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா இடையே நீடித்து வரும் மோதல் மற்றும் பதற்றத்தை தணிப்பதற்காக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 12-ந் தேதி 7-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது.

இதில் எல்லையில் இரு தரப்பும் படைகளை விலக்குவது குறித்து பேசப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை. எனினும் இந்த பேச்சுவார்த்தை நேர்மறையாகவும், ஆக்கபூர்வமாகவும் இருந்ததாக இரு தரப்பும் கூறின. மேலும் பேச்சுவார்த்தையை தொடர இருதரப்பும் முடிவு செய்துள்ளதாக கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது.

அந்த வகையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 8-வது சுற்று பேச்சுவார்த்தை இந்த வாரம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக ராணுவ வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. எனினும் இதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் அவை கூறின. இந்த பேச்சுவார்த்தையிலும் படைகளை விலக்குவது குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவின் முதல் கடல் விமான சேவைகள் இன்று துவக்கம்
இந்தியாவின் முதல் கடல் விமான சேவைகள் இன்று துவங்கியது.
2. இந்தியாவில் மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம், கடினமாக உழைப்போம் - முதலமைச்சர் பழனிசாமி
இந்தியாவில் மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம், கடினமாக உழைப்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
3. இந்தியாவில் இன்று புதிதாக 48,268 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இந்தியாவில் இன்று புதிதாக மேலும் 48,268 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய 48648 கொரோனா பாதிப்புகள்; மொத்த பாதிப்பு 80,88,851
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48648 கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யபட்டு உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 80,88,851 ஆக உயர்ந்து உள்ளது.
5. இந்தியாவின் தாக்குதலுக்குப் பயந்து அபிநந்தன் விடுவிப்பு: இப்போதாவது ராகுல்காந்தி நம்புவாரா? - ஜே.பி.நட்டா கேள்வி
இந்தியாவின் தாக்குதலுக்குப் பயந்துதான் பாகிஸ்தான் அபிநந்தனை விடுதலை செய்தது. இப்போதாவது ராகுல்காந்தி இதனை நம்புவாரா? என ஜே.பி.நட்டா கேள்வி எழுப்பி உள்ளார்.