தேசிய செய்திகள்

மார்தோமா திருச்சபை தலைவர் மரணம்-பிரதமர் மோடி இரங்கல் + "||" + PM Modi condoles demise of Dr Joseph Mar Thoma

மார்தோமா திருச்சபை தலைவர் மரணம்-பிரதமர் மோடி இரங்கல்

மார்தோமா திருச்சபை தலைவர் மரணம்-பிரதமர் மோடி இரங்கல்
மார்தோமா திருச்சபை தலைவர் கணைய புற்று நோய் பாதிப்பால் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார்.
திருவனந்தபுரம், 

கேரள மாநிலத்தில் கத்தோலிக்க, அப்போஸ்தல திருச்சபையின் அங்கமாக மார்தோமா திருச்சபை இயங்கி வருகிறது. இதன் 21-வது தலைவராக விளங்கியவர், ஜோசப் மார்தோமா (வயது 89).

இவர் கணைய புற்றுநோய் பாதித்த நிலையில், திருவல்லாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார்.

இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் விடுத்துள்ள செய்தியில், “டாக்டர் ஜோசப் மார்தோமா மனித குலத்துக்கு சேவை செய்த குறிப்பிடத்தக்க ஆளுமை ஆவார். ஏழைகள் மற்றும் நலிவடைந்தோர் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக கடுமையாக உழைத்தவர். அவரது உன்னத லட்சியங்கள் எப்போதும் நினைவில் இருக்கும்” என கூறி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும்- பிரதமர் மோடி டுவிட்
பீகாரில் சட்டமன்ற தேர்தல் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றி அனைவரும் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2. இந்தியாவின் எரிசக்தி எதிர்காலம் பிரகாசமானது மட்டுமல்ல பாதுகாப்பு நிறைந்தது - பிரதமர் மோடி
இந்தியாவின் எரிபொருள் தேவை வருங்காலங்களில் இரட்டிப்பாகும் என்று பிரதமர் மோடி கூறினார்.
3. தூத்துக்குடி சலூன் கடையில் நூலகம் நடத்தி வரும் பொன் மாரியப்பனுடன் பிரதமர் உரையாடல்
தூத்துக்குடியில் சலூன் கடை நடத்தி வரும் பொன் மாரியப்பன், அங்கே ஒரு நூலகம் அமைத்திருப்பதாக பிரதமர் மோடி பாராட்டினார்.
4. ‘மன் கி பாத்’: பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்
பிரதமர் நரேந்திர மோடி இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் 70-வது முறையாக உரையாற்றுகிறார்.
5. குஜராத்தில் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
குஜராத்தில் வேளாண்மைத்துறை, சுற்றுலாத்துறை, மருத்துவத்துறைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடக்கி வைத்தார்.