மாநில செய்திகள்

கிராமங்களிலும், நகரங்களிலும் வேலைவாய்ப்பு திட்டங்களை ஏற்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் - மு.க.ஸ்டாலின் + "||" + In villages and towns Establish employment plans Tamil Nadu government should take action on wartime basis - MK Stalin

கிராமங்களிலும், நகரங்களிலும் வேலைவாய்ப்பு திட்டங்களை ஏற்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் - மு.க.ஸ்டாலின்

கிராமங்களிலும், நகரங்களிலும் வேலைவாய்ப்பு திட்டங்களை ஏற்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் - மு.க.ஸ்டாலின்
கிராமங்களிலும், நகரங்களிலும் வேலைவாய்ப்பு திட்டங்களை ஏற்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் உள்ள இளைஞர்களும், ஏழை-எளிய, நடுத்தர மக்களும் வேலை இழப்பு, வருமான இழப்பு என்ற இரட்டிப்புக் கொடுமைகளில் சிக்கி தினமும் இன்னல்களினால் திணறிக் கொண்டிருப்பதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுவரை கண்டுகொள்ளாமல் இருப்பது பெரிய தவறு. ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு விதத்தில் வேலை இழப்பு நேர்ந்து தங்களின் குடும்ப வருமானத்தை இழந்து விட்டு, கொரோனா நோய்த் தொற்றின் அச்சத்தில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். இதைச் சமாளிக்கவே, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 ஆயிரம் ரொக்கமாகக் கொடுத்து உதவிடவேண்டும் என்று பலமுறை தி.மு.க.வின் சார்பில் வலியுறுத்தியும் அதை அ.தி.மு.க. அரசு ஏற்க மறுத்து வழக்கமாக “கமிஷன்” அடிக்க உதவும் டெண்டர்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது.

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை குறிப்பாக, கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்க பரிந்துரைகளை அளிக்குமாறு ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தலைமையில் ஒரு குழுவினை அ.தி.மு.க. அரசு அமைத்தது. 250 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அந்தக்குழு முதல்- அமைச்சரிடம் அளித்து ஒரு மாதத்தை நெருங்கி விட்டது. ஆனால் அந்த அறிக்கையை, மக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக, வெளியிடவும் இல்லை. பரிந்துரைகள் மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அறிக்கையை முதல்-அமைச்சரிடம் அளித்தபோது, “கிராமப்புறங்களில் உள்ள வேலைவாய்ப்புத் திட்டங்கள் போல் எடுத்துக்காட்டாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் போல், நகர்ப்புறங்களில் ஒரு வேலைவாய்ப்புத் திட்டத்தை உருவாக்கிடவேண்டும்” என்று பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் அப்படி எந்த ஒரு திட்டத்தையும் நகர்ப்புறத்திற்காக இதுவரை அ.தி.மு.க. அரசு அறிவிக்கவில்லை.

முதல்-அமைச்சரிடம் அறிக்கையை அளித்து விட்டு, பத்திரிகையாளர்களிடம் பேசிய ரங்கராஜன், “விரைவில் தமிழகம் ஊரடங்கிலிருந்து வெளிவருவதுதான் தமிழகப் பொருளாதாரத்திற்கு நல்லது” என்றும், “தமிழக பொருளாதாரம் 2 மாதங்களில் மீளும்” என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால் அப்படி அவர் கூறி ஒரு மாதத்தைக் கடக்கப்போகும் இந்த நேரத்தில் கூட கொரோனா ஊரடங்கிலிருந்து முற்றிலும் தமிழ்நாடு வெளியே வருவதற்கான சூழல்களை அ.தி.மு.க. அரசு உருவாக்கவில்லை. அதற்கு பதில் தினமும் கொரோனா நோய்த் தொற்றுத்தொடருகிறது.

பொருளாதார தேக்க நிலைமையும், வருமானம் இழப்பு, வேலை இழப்பு ஆகிய துன்பம் தொடருகிறது. இந்த துறைகளில் அரசின் தோல்வியை திசைதிருப்ப வந்த உண்மையான முதலீடுகள் எவ்வளவு என்பது குறித்து எதையும் சொல்லாமல் புரிந்துணர்வு ஒப்பந்த விளம்பரங்கள் மட்டும் வெளியிடப்படுகிறது. “இதோ முதலீடு வருகிறது. இதோ தொழில்கள் தொடங்கப்போகிறது. இதோ வேலைவாய்ப்பு வரப்போகிறது” என்று கடந்த 10 ஆண்டுகளாக சொன்ன ‘அம்புலி மாமா’ கதையையே திரும்பத் திரும்ப அ.தி.மு.க. அரசு கூறி ஏமாற்றி வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த 4 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களிடம் “புரிந்துணர்வு ஒப்பந்தம்” என்று மட்டும் கூறியே காலத்தைக் கடத்தி வருகிறார். மந்திரத்தால் மாங்காய் விழுந்துவிடாது என்பதை உணரவேண்டும்.

ஆகவே இனியும் இதுபோன்ற “திசை திருப்பும்” வேலைகளில் ஈடுபட்டு வேலைவாய்ப்பை இழந்து நிற்கும் தமிழக இளைஞர்களை ஏமாற்றாமல் கிராமப்புறத்தில் உள்ள வேலை வாய்ப்புகளை பெருக்க உருப்படியான நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல் நகர்ப்புறத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கிட, பிரத்தியேகமாக ஒரு “நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தை” அறிவிக்குமாறு எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன்.

வேலை இழந்து விரக்தியின் விளிம்பில் நிற்கும் இளைஞர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் ஆக்கப்பூர்வமான வேலை வாய்ப்புத் திட்டங்களை தேவையான அளவுக்கு கிராமங்களிலும், நகரங்களிலும் ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்கவேண்டும் என்று முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன். “சாலை ஓரத்திலே வேலை அற்றவர்கள்; வேலை அற்றவர்களின் மனதிலே விபரீதமான எண்ணங்கள்; இதுதான் காலத்தின் குறி!” என்று பேரறிஞர் அண்ணா அன்றே சொன்னதை மறந்துவிடக் கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. முதலமைச்சராக பழனிசாமி பொறுப்பேற்ற பின்பு தான் நீட் தேர்வு நடத்தப்படுகிறது - மு.க.ஸ்டாலின்
முதலமைச்சராக பழனிசாமி பொறுப்பேற்ற பின்பு தான் நீட் தேர்வு நடத்தப்படுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
2. 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி அ.தி.மு.க.வுடன் இணைந்து போராட தயார் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி அ.தி.மு.க.வுடன் இணைந்து போராட தயார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3. அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
4. கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் காணொலிக்காட்சி வாயிலாக மு.க.ஸ்டாலின் பேச்சு
கரூர் மாவட்ட தி.மு.க.சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், காணொலிக்காட்சி வாயிலாக மு.க.ஸ்டாலின் பேசினார்.
5. மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயார் ஆகி விட்டார்கள் தேர்தல் பணிகளை முன்னெடுங்கள் - தொண்டர்களுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயார் ஆகி விட்டார்கள் என்றும், தேர்தல் பணிகளை முன்னெடுங்கள் என்றும் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.