மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்க தற்போது வாய்ப்பு இல்லை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி + "||" + There is currently no opportunity to open schools in Tamil Nadu Interview with Minister KA Shenkotayan

தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்க தற்போது வாய்ப்பு இல்லை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்க தற்போது வாய்ப்பு இல்லை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்க தற்போது வாய்ப்பு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கடத்தூர், 

ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக நியாய விலை கடைகளில் பயோ மெட்ரிக் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு குறித்து பல விமர்சனங்கள் வந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவர் தான் முதலிடம் பெற்றுள்ளார். 12 ஆண்டு காலத்துக்கு பிறகு மாற்றப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் இருந்து தான் நீட் தேர்வில் 180 கேள்விகளில் 174 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில், இ-பாக்ஸ் நிறுவனத்தின் மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு முறை மட்டுமே அரசு இலவச பயிற்சி அளிக்கும். 2-ம் முறை நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தனியார் மூலம் பயிற்சி பெற்று தான் தேர்வு எழுத வேண்டும்.

மருத்துவ படிப்புக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க முதல்-அமைச்சர் சட்டம் இயற்றியுள்ளார். பள்ளிகள் திறக்க தற்போது வாய்ப்பு இல்லை. மேலும் பள்ளிகள் திறப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் எதுவும் நடைபெறவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
தமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
2. தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
3. தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
4. தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக மின் உற்பத்தியாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.
5. தமிழகத்தில் வட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.