தேசிய செய்திகள்

ஐதராபாத் மீண்டும் வெள்ளத்தில் மிதக்கிறது + "||" + Hyderabad Battered By Heavy Overnight Rain, Flash Floods In Some Parts

ஐதராபாத் மீண்டும் வெள்ளத்தில் மிதக்கிறது

ஐதராபாத் மீண்டும் வெள்ளத்தில் மிதக்கிறது
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த வாரம் புதன்கிழமை இரவில் கொட்டித்தீர்த்த கனமழையால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஐதராபாத், 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த வாரம் புதன்கிழமை இரவில் கொட்டித்தீர்த்த கனமழையால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பலர் பலியானார்கள். அந்த வெள்ளம் வடிந்து முடிந்த சமயத்தில் நேற்று முன்தினத்தில் இருந்து மீண்டும் அங்கு கனமழை பொழிந்தது. 

ஏற்கனவே அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிந்திருந்ததால் உடனே வெள்ளமாக பெருக்கெடுக்க ஆரம்பித்தது. எனவே அங்கு இரண்டாம் கட்டமாக வெள்ள அபாயம் அதிகமானது. இந்த இரண்டாம் சுற்று வெள்ளத்தில் நேற்று ஒரு சுவர் இடிந்து விழுந்ததில் 5 வயது சிறுமி ஒருத்தி இறந்துள்ளாள். அக்டோபர் இறுதி வரை அங்கு மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. தெலுங்கானா வெள்ள நிவாரணமாக ரூ.1.5 கோடி நிதி உதவி அளிக்கும் பிரபாஸ்
தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு நிவாரண நிதியாக ரூ.1.5 கோடி வழங்குவதாக நடிகர் பிரபாஸ் அறிவித்துள்ளார்.
2. வியட்நாமில் கனமழை நிலச்சரிவில் ராணுவ முகாம் புதைந்து 22 பேர் பலி...?
வியட்நாமில் பெய்த கனழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ராணுவ முகாம் ஒன்று மண்ணுக்குள் புதைந்ததில் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3. தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
அந்தமான் கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. தெலுங்கானா, ஆந்திராவில் கனமழைக்கு 25 பேர் பலி: 2 நாள் விடுமுறை அறிவிப்பு
தெலுங்கானாவில் கனமழைக்கு 15 பேரும், ஆந்திராவில் 10 பேரும் பலியானார்கள். மழை தொடரும் என்பதால், தெலுங்கானாவில் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.