உலக செய்திகள்

நிலாவை சொந்தமாக்கும் முயற்சி: 4ஜி நெட்வொர்க்கை அமைக்க பிரபல செல்போன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் + "||" + Nokia secures $14.1m NASA funding to roll out 4G on the Moon

நிலாவை சொந்தமாக்கும் முயற்சி: 4ஜி நெட்வொர்க்கை அமைக்க பிரபல செல்போன் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

நிலாவை சொந்தமாக்கும் முயற்சி: 4ஜி நெட்வொர்க்கை அமைக்க பிரபல செல்போன் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
நிலவில் 4ஜி நெட்வொர்க்கை அமைக்க பிரபல செல்போன் நிறுவனமான நோக்கியாவுடன் நாசா ஒப்பந்தம் போட்டு உள்ளது.
வாஷிங்டன்

சந்திரனை சொந்தம் கொண்டாடும் முயற்சியில் அமெரிக்காவின் நாசா ஈடுபடதொடங்கி உள்ளது. சந்திரனில உள்ள வளங்களுக்கான புதிய சந்தையை உருவாக்கும் செயல்முறையை அமைத்து வருகிறது. இதற்காக அங்குள்ள உள்ள பாறைகளையும், பாறை படிவங்களையும் எடுக்கக்கூடிய உலகெங்கிலும் உள்ள தனியார் நிறுவனங்களைத் நாசா தேடுகிறது

அது போல்  நிலவில் 4ஜி நெட்வொர்க்கை அமைக்க பிரபல செல்போன் நிறுவனமான நோக்கியாவுடன் நாசா ஒப்பந்தம் போட்டு உள்ளது.

2028க்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி ஆய்வு செய்வதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ள நாசா, அதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்க, பல நிறுவனங்களுடன் இந்திய மதிப்பில் 2 ஆயிரத்து 714 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

அந்த வகையில், நிலவில் ஆய்வு செய்யும்போது விண்வெளி வீரர்கள் விண்கலத்துடன் தொடர்புகொள்வதற்கும், எச்டி தரத்திலான படங்களை அனுப்பவும், நிலவின் மேற்பரப்பில் 4ஜி நெட்வொர்க்கை அமைக்க நோக்கியாவுக்கு இந்திய மதிப்பில் 102 கோடி ரூபாயை நாசா வழங்கியுள்ளது.  



தொடர்புடைய செய்திகள்

1. புதிய அதிபராக ஜோ பைடன் தேர்வு: நாசா தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன் ராஜினாமா...?
புதிய அதிபராக ஜோ பைடன் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து நாசாவின் தலைமை நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் தனது பதவியை ராஜினாமா செய்கிறார்.
2. அழிவின் விளிம்பில் இருக்கும் 6.5 கோடி ஆண்டுகள் பழமையான ஆஸ்பிரீட் மீன் இனம்
அழிவின் விளிம்பில் இருக்கும் 6.5 கோடி ஆண்டுகள் பழமையான ஆஸ்பிரீட் மீன் இனத்தை விஞ்ஞானிகள், உயிரியியல் பாதுகாப்பு வல்லுநர்கள் காப்பாற்றிவருகிறார்கள்.
3. 27,000 கி.மீ வேகத்தில் சூரியன்-சந்திரனை கடந்து செல்லும் விண்வெளி நிலையத்தை படம் எடுத்த புகைப்பட கலைஞர்
27,000 கி.மீ வேகத்தில் சூரியன் மற்றும் சந்திரனை கடந்து செல்லும் சர்வதேச விண்வெளி நிலையத்தை புகைப்பட கலைஞர் ஒருவர் படம் எடுத்து உள்ளார்.
4. 21 அடி வரை இறக்கைகள் கொண்ட வரலாற்றில் மிகப்பெரிய பறக்கும் பறவைகள்- விஞ்ஞானிகள் ஆச்சரியம்
21 அடி வரை இறக்கைகள் மற்றும் ஹாக்ஸா போன்ற பற்கள் கொண்ட வரலாற்றில் மிகப்பெரிய பறக்கும் பறவைகள் எது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
5. பூமியைப்போல் உயிர்கள் வாழக்கூடிய ஆதாரங்கள் உள்ள கிரகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
விஞ்ஞானிகள் பூமியைப்போல் உயிர்கள் வாழக்கூடிய ஆதாரங்கள் உள்ள கிரகத்தை கண்டறிந்து உள்ளனர்