உலக செய்திகள்

ஜனாதிபதி தேர்தல்: ஜோ பிடன்- நிருபரை கிரிமினல் என அழைத்த டொனால்டு டிரம்ப் + "||" + Donald Trump 'running angry,' attacks polls, press and Dr. Fauci

ஜனாதிபதி தேர்தல்: ஜோ பிடன்- நிருபரை கிரிமினல் என அழைத்த டொனால்டு டிரம்ப்

ஜனாதிபதி தேர்தல்: ஜோ பிடன்- நிருபரை கிரிமினல் என அழைத்த டொனால்டு டிரம்ப்
அமெரிக்காவில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜோ பிடன் ஒரு கிரிமினல் என்று ஜனாதிபதி டிரம்ப் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வாஷிங்டன்

அமெரிக்காவில் வரும் 3ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் அவர் குடும்பத்தினருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து டிரம்பிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

அப்போது தன்னிடம் கேள்வி கேட்ட ராய்டர்ஸ் செய்தியாளர் ஜெஃப் மேசனை ஒரு கிரிமினல் என்று வசை பாடிய டிரம்ப், எதிர்கட்சி வேட்பாளரான ஜோ பிடனும் ஒரு கிரிமினல் என்றும் தெரிவித்தார்.

'நீங்கள் ஒரு குற்றவாளி [புகாரளிக்கவில்லை]. நான் உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன், ஜோ பிடன் ஒரு குற்றவாளி, அவர் நீண்ட காலமாக ஒரு குற்றவாளியாக இருக்கிறார், அதைப் புகாரளிக்காததற்காக நீங்கள் ஒரு குற்றவாளி மற்றும் உங்கள் ஊடகமாகும். அனைவருக்கும் நல்ல அதிர்ஷ்டம். ஒரு நல்ல நேரம் கிடைக்கும் என கூறினார்.

மேலும் அமெரிக்க நோய்த்தொற்று  நிபுணர் டாக்டர். அந்தோணி ஃபாசி மற்றும் பிற நிபுணர்களை முட்டாள்கள் என்று அழைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: அரிசோனா, விஸ்கான்சின் மாகாணங்களில் ஜோ பைடன் வெற்றியாளராக சான்று
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், அரிசோனா, விஸ்கான்சின் மாகாணங்களில் ஜோ பைடன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
2. ஜோ பைடன் அரிசோனா - ஜார்ஜியா மாநிலங்களை கைப்பற்றினார்; வாக்கு எண்ணிக்கை 306 ஆக உயர்வு
ஜோ பைடன் அரிசோனா மற்றும் ஜார்ஜியா மாநிலங்களை கைப்பற்றி உள்ளார். அவரது வாக்கு எண்ணிக்கை 306 ஆக உயர்ந்தது. டிரம்ப் 232 வாக்கு எண்ணிக்கையில் உள்ளார்.
3. ஜனவரி 20 க்குப் பிறகு வேறு நிர்வாகம்... தோல்வியை சூசகமாக ஒப்புக்கொண்ட டொனால்டு டிரம்ப்...?
ஜனவரி 20 க்குப் பிறகு அவர் அதிபராக இருக்க மாட்டார் என்பதை சூசமாக தெரிவித்து தனது தோல்வியை ஒப்புக்கொள்ள டொனால்டு டிரம்ப் நெருங்கி உள்ளார்.
4. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோல்வியை ஏற்க மறுப்பது வெட்கக்கேடானது - ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வி அடைந்ததை டிரம்ப் ஏற்க மறுப்பது வெட்கக்கேடானது என ஜோ பைடன் விமர்சித்தார்.
5. தேர்தல் முடிவுகளுக்கு முன் டிரம்ப் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளை நீக்கி விசுவாசிகளை நியமித்தார்
தேர்தல் முடிவுகளுக்கு முன் டிரம்ப் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளை நீக்கி தனது விசுவாசிகளை நியமித்து உள்ளார். இதனால் பென்டகன் அதிகாரிகளிடையே எச்சரிக்கை உணர்வை தூண்டி உள்ளது.