மாநில செய்திகள்

வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு + "||" + Onion prices rise sharply TamilNadu government has decided to sell it for 45 rupees one KG

வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு

வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு பண்ணை பசுமைக் காய்கறி கடைகள் மூலமாக கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
சென்னை :

ஆந்திரா, கர்நாடகாவில் தொடர்ந்து  மழை பெய்து வருவதால்.அங்கு இருந்து வரும் வெங்காயத்தின் வரவு குறைந்ததால் தமிழகத்தில் வெங்காயம் விலை அதிகரித்துள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ. 100 முதல் 110 வரை விற்பனையாகிறது. ரூ. 80க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தின் விலை மேலும் 20 முதல் 30 வரை உயர்ந்துள்ளது. 

இந்த நிலையில், வெங்காய விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில், கூட்டுறவு பண்ணை பசுமைக் காய்கறி கடைகள் மூலமாக நாளை முதல் சென்னையிலும், நாளை மறுநாள் முதல் மற்ற மாவட்டங்களிலும் கிலோ 45 ரூபாய்க்கு பெரிய வெங்காயம் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், வெங்காயம் பதுக்கலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. வெங்காய விலை உயர்வு: வேளாண் சட்டங்களால் மேலும் விலை உயரும் - திமுக தலைவர் ஸ்டாலின்
வேளான் சட்டங்களால் பதுக்கல் அதிகரித்து வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலை மேலும் உயரும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2. வேளாண் உபகரணங்கள் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன் வேண்டுகோள்
வேளாண் உபகரணங்கள் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. ராஜஸ்தான் மாநிலத்தை போன்று தமிழக அரசும் சட்டம் இயற்றி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
ராஜஸ்தான் மாநிலத்தை போன்று தமிழக அரசும் சட்டம் இயற்றி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
4. வேளாண் சட்டத்தை தமிழக அரசு எதிர்க்காவிடில் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்படுவீர்கள் - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
வேளாண் சட்டத்தை தமிழக அரசு எதிர்க்காவிடில் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்படுவீர்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5. வீடு தேடிவரும் ரேஷன் பொருள்: 3,501 நகரும் நியாயவிலை கடை திட்டம்- எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் நகரும் நியாயவிலை கடை வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.