தேசிய செய்திகள்

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை + "||" + Another terrorist shot dead by security forces in Kashmir

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீரின் இன்று பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஷ்மீர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். ஹக்ரிபுரா என்ற பகுதியில் தேடுதல் வேட்டை நடத்திய போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.


இதையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிரிழந்த பயங்கரவாதிகளின் பெயர், எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் வெளியாகவில்லை. மேலும், துப்பாக்கிச்சூடு நடந்த பகுதியில் இன்னும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் குறித்த விவரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர், கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் முதற்கட்ட தேர்தல்; 51.76% வாக்குகள் பதிவு
காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சிலின் முதற்கட்ட தேர்தலில் 51.76% வாக்குகள் பதிவாகி உள்ளது.
2. காஷ்மீரில் 4 மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்படும் அபாயம்- அதிகாரிகள் எச்சரிக்கை
ஸ்ரீநகர்- ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பதை அடுத்த சில நாட்களுக்கு வாகன ஓட்டிகள் புறக்கணிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
3. இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்: மெகபூபா முப்தி
இந்தியாவும் பாகிஸ்தானும் அரசியல் நிர்பந்தங்களை தாண்டி, பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
4. காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டையின் போது போலீசாரிடம் சரணடைந்த பயங்கரவாதி
காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் ஒருவர் போலீசிடம் சரணடைந்தார்.
5. காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.