உலக செய்திகள்

காங்கோவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 1300 சிறைக் கைதிகள் தப்பி ஓட்டம் + "||" + DR Congo jail break Islamist ADF rebels free 1300 inmates

காங்கோவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 1300 சிறைக் கைதிகள் தப்பி ஓட்டம்

காங்கோவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 1300 சிறைக் கைதிகள் தப்பி ஓட்டம்
காங்கோவில் ஆயுதமேந்திய குழுவினர் நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் தப்பிச் சென்றனர்.
பெனி

காங்கோவில் பெனி என்ற இடத்தில் உள்ள சிறைச்சாலையில் நேற்று அதிகாலை ஆயுதமேந்திய 100 பேர் கொண்ட கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து சிறையில் இருந்த ஆயிரத்து 300க்கும் அதிகமான கைதிகளை அந்தக் கும்பல் மீட்டுச் சென்றது.

இவர்களில் 20 கைதிகள் மீண்டும் சிறைக்கே வந்துவிட்ட நிலையில் தப்பியோடிய கும்பலையும், கைதிகளையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தப்பிச் சென்ற 14 பேரை போலீசார் பிடித்து உள்ளனர்.  இந்த சோதனையின் போது இரண்டு கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று போலீசார் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

பெனியில் உள்ள இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினென்ட் அந்தோனி மாலுஷே பிபிசியிடம் தப்பிச் சென்ற கைதிகளை பிடிக்கும் நடவடிக்கை நடந்து வருவதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாக். பயங்கரவாதிகள் ஏற்படுத்திய ஆறாத ரணத்தின் 12-ம் ஆண்டு நினைவு தினம்
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் 12 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாள் கடல் மார்க்கமாக ஊடுருவி 3 நாட்கள் நடத்திய மிருகத்தன தாக்குதலால் ஒட்டுமொத்த தேசமே ஸ்தம்பித்து போனது.
2. மும்பை தாக்குதலுக்கு உதவிய 11 பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருப்பதை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டது
மும்பையில் தாக்குதலுக்கு உதவிய 11 பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருப்பதை பாகிஸ்தானின் உயர்மட்ட விசாரணை ஆணையம் ஏற்றுக்கொண்டு உள்ளது.
3. இந்தியாவிற்குள் நுழைய காஷ்மீர் எல்லையில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் உளவுத்துறை எச்சரிக்கை
இந்தியாவிற்குள் நுழைய காஷ்மீர் எல்லையில் 200-முதல் 300 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
4. கொரோனாவை தொடர்ந்து காங்கோ காய்ச்சல் பால்கர் மாவட்டத்தில் உஷார்
காங்கோ காய்ச்சல் பரவ வாய்ப்பு இருப்பதால் பால்கர் மாவட்டத்தில் உஷார்படுத்தப்பட்டு உள்ளது.
5. காங்கோ நாட்டில் பரிதாபம் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 50 பேர் பலி
காங்கோ நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.