தேசிய செய்திகள்

30.67 லட்சம் ஊழியர்கள் பலனடைவர்: மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு + "||" + 30 lakh non-gazetted employees will be benefited by the bonus announcement and total financial implication will be Rs 3,737 crores: Union Minister Prakash Javadekar

30.67 லட்சம் ஊழியர்கள் பலனடைவர்: மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

30.67 லட்சம் ஊழியர்கள் பலனடைவர்: மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி, 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. 

இந்நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. விஜய தசமிக்கு முன் ஒரே தவணையாக போனஸ் வழங்கப்படும். 

மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதன் மூலம் அரசுக்கு ரூ.3,737 கோடி செலவு ஏற்படும். இதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலனடைவர்.

தீபாவளி போனஸ், வரும் விஜய தசமிக்கு முன் ஒரே தவணையாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதன் மூலம் பண்டிகை காலத்தில் பணப்புழக்கம் அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.