பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
அபுதாபி,
துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். போட்டித் தொடரின் இன்றைய 39வது ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், இயன் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் அபுதாபியில் உள்ள சேக் சையீது மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் இயன் மார்கன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து இன்னும் சற்று நேரத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.