சினிமா செய்திகள்

நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் இலங்கையில் இருப்பது கண்டுபிடிப்பு + "||" + threat to actor Vijay Sethupathi's daughter

நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் இலங்கையில் இருப்பது கண்டுபிடிப்பு

நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் இலங்கையில் இருப்பது கண்டுபிடிப்பு
நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு சமூக வலைத்தளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை,

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் 800 என்ற தலைப்பில் திரைப்படம் தயாரிக்கப்போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில் முத்தையா முரளிதரன் விஜய் சேதுபதிக்கு விடுத்த வேண்டுகோளில் 800 என்ற திரைப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறி இருந்தார். அதை ஏற்று விஜய் சேதுபதி 800 திரைப்படத்தில் நடிப்பதில் இருந்து விலகிக்கொண்டார்.

இதற்கிடையில் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்து, நபர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆபாச கருத்துகளை பதிவிட்டிருந்தார். இதற்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்து இருந்தார். சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கனிமொழி தனது கண்டனத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இது தொடர்பாக நேற்று இரவு போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார்அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில், விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த நபர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியிட்டார்.

கலகத்தை தூண்டுதல், ஆபாச கருத்து பதிவிடுதல் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் போன்ற 3 சட்டப்பிரிவுகளில் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில்,  சைபர் கிரைம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், 

நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் இலங்கையில் இருப்பது தெரியவந்துள்ளது. மிரட்டல் விடுத்தவரின் ஐபி முகவரி மூலம் இலங்கையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இண்டர்போல் உதவியுடன் இலங்கையில் உள்ளவரை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். 

குறிப்பிட்ட குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்ய சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.