கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: 84 ரன்களில் சுருண்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் + "||" + IPL Cricket: Kolkata Knight Riders scored 84 runs

ஐ.பி.எல். கிரிக்கெட்: 84 ரன்களில் சுருண்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட்: 84 ரன்களில் சுருண்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் கொல்கத்தா அணி 84 ரன்கள் எடுத்துள்ளது.
அபுதாபி,

துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். போட்டித் தொடரின் இன்றைய 39வது ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், இயன் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் அபுதாபியில் உள்ள சேக் சையீது மைதானத்தில் நடைபெறுகிறது.


இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் இயன் மார்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் ராகுல் திரிபாதி களமிறங்கினர். ஆனால் பவர்பிளே முடிவதற்குளாகவே கொலகத்தா அணி 14 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது.

அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து மிகக்குறைந்த ரன் வேகத்தில் கொல்கத்தா அணி திண்டாடியது. அணியில் அதிகபட்சமாக கேப்டன் இயன் மார்கன் 30 ரன்கள் எடுத்திருந்தார். பெங்களூரு அணியின் அபாரமான பந்திவீச்சால், கொல்கத்தா அணி 84 ரன்களில் சுருண்டது.

மேலும் இந்த ஆட்டத்தின் மூலம் ஐ.பி.எல். போட்டியில் இரண்டு மெய்டன் ஓவர்கள் வீசிய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை முகமது சிராஜ் பெற்றுள்ளார். இறுதியாக 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் எடுத்தது. லாக்கி ஃபெர்கன்சன்(19 ரன்கள்) மற்றும் குல்தீப் யாதவ்(12 ரன்கள்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதனை தொடர்ந்து 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூர் அணி தற்போது விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்: 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்; ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 148 ரன்கள் இலக்கு
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 147 ரன்கள் எடுத்துள்ளது.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: வெற்றிக்கணக்கை தொடங்குமா ஐதராபாத்?
தனது தொடக்க ஆட்டத்தில் கடைசி பந்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சுக்கு இதே சென்னை சேப்பாக்கத்தில் வைத்து அதிர்ச்சி அளித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி அந்த வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் முனைப்புடன் உள்ளது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது.