தேசிய செய்திகள்

மராட்டியத்தில் மேலும் 8,142 பேருக்கு கொரோனா தொற்று- சுகாதாரத்துறை தகவல் + "||" + Covid-19 Live Updates: India's active cases below 7.5 lakh; Maharashtra adds 8,142 new coronavirus cases

மராட்டியத்தில் மேலும் 8,142 பேருக்கு கொரோனா தொற்று- சுகாதாரத்துறை தகவல்

மராட்டியத்தில்  மேலும் 8,142 பேருக்கு கொரோனா தொற்று- சுகாதாரத்துறை தகவல்
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பால் இன்று ஒருநாளில் மட்டும் 180- பேர் உயிரிழந்தனர்.
மும்பை,

நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தநிலையில் 3½ மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மாநிலத்தில் பாதிப்பு அதிரடியாக குறைந்தது. அன்று 5 ஆயிரத்து 984 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது. அதாவது 3½ மாதங்களுக்கு பிறகு தொற்று பாதிப்பு 6 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது. 

இந்த நிலையில், மராட்டியத்தில்  நேற்றும் இன்றும் கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,142- ஆக உள்ளது. அதேபோல், இன்று ஒரே நாளில் 180- பேர் உயிரிழந்துள்ளனர். 

இதன் மூலம் மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்து 633- ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 லட்சத்து 17 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மாநில தலைநகர் மும்பையில் இன்று 1,609- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனிமைப்படுத்தல் - மனைவிக்கு கொரோனா உறுதியானதையடுத்து நடவடிக்கை
டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனா பரவல் அதிகரிப்பு: மராட்டியத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்
மராட்டியத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அம்மாநிலத்தில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியேறி வருகின்றனர்.
3. மத்திய மந்திரி ஜிஜேந்திர சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி
மத்திய மந்திரி ஜிஜேந்திர சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. டெல்லி: முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள போதும் காற்றில் பறந்த சமூக இடைவெளி
டெல்லியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளபோதும் காய்கனி சந்தை பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் சமூக இடைவெளியின்றி நடமாடிய நிகழ்வு வைரஸ் பரவலை அதிகரிக்ககூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
5. டெல்லி: கொரோனா பாதிப்பால் நீதிபதி உயிரிழப்பு
டெல்லியில் கொரோனா வைரசால் பாதிப்பட்ட நீதிமன்ற நீதிபதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.