கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தாவை பந்தாடியது பெங்களூரு + "||" + Royal Challengers Bangalore won by 8 wkts

ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தாவை பந்தாடியது பெங்களூரு

ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தாவை பந்தாடியது பெங்களூரு
கொல்கத்தா அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் 14 புள்ளிகளுடன், பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் 2- ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அபுதாபி,

துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். போட்டித் தொடரின் இன்றைய 39-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், இயன் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்  மோதின.

 அபுதாபியில் உள்ள சேக் சையீது மைதானத்தில்  நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் இயன் மார்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் ராகுல் திரிபாதி களமிறங்கினர்.  

பெங்களூரு அணியின் அனல் பறக்கும் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் கொல்கத்தா அணி வீரர்கள் தடுமாறினர்.  பவர்பிளே முடிவதற்குள்ளாகவே கொல்கத்தா அணி 14 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து மிகக்குறைந்த ரன் வேகத்தில் கொல்கத்தா அணி திண்டாடியது. அணியில் அதிகபட்சமாக கேப்டன் இயன் மார்கன் 30 ரன்கள் எடுத்திருந்தார்.  

இந்த ஆட்டத்தின் மூலம் ஐ.பி.எல். போட்டியில் இரண்டு மெய்டன் ஓவர்கள் வீசிய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை முகமது சிராஜ்  பெற்றார். இறுதியாக 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் எடுத்தது.  பெங்களூரு அணியில் அபாரமாக பந்து வீசிய சிராஜ் 4 ஓவர்கள் வீசி 8 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து, 85 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ்  பெங்களூரு அணி, எந்த சிரமமும்  இன்றி கொல்கத்தா பந்து வீச்சை எதிர்கொண்டது.  13.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 85 ரன்கள் எடுத்து  பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகளுடன் பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில்  2- ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடு; பெங்களூருவில் 144 தடை உத்தரவு
இங்கிலாந்து நாட்டில் புதிதாக உருவாகி உள்ள கொரோனா காரணமாக உலகம் முழுவதும் அச்சம் எழுந்துள்ளது.
2. இங்கிலாந்தில் இருந்து பெங்களூரு வந்த 212 பேர் மாயம்? - அவர்களை கண்டறியும் பணி தீவிரம்
இங்கிலாந்தில் இருந்து பெங்களூரு வந்த 212 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
3. ஆஸ்திரேலியாவில் பயிற்சியை தொடங்கிய கிரிக்கெட் வீரர் நடராஜன்
பயிற்சியின் போது டி நடராஜன் முதன்முறையாக இந்திய அணி வீரர்களுக்கு பந்து வீசினார். அவர் பந்து வீசும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
4. 13-வது ஐபிஎல் சீசனில் விருது வென்ற வீரர்கள் விவரம்...!
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த கே.எல் ராகுலுக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்பட்டுள்ளது.
5. ஐபிஎல்: பிளே ஆப் சுற்றை ஐதராபாத் எட்டுமா? வெற்றி இலக்காக 150 ரன்கள் நிர்ணயம்
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 149 ரன்கள் சேர்த்துள்ளது.